Tuesday, 27 August 2019

பாடம் 31: கோச்சார பலன்

பாடம் 31:


கோச்சார பலன்:

         ஜாதக பலன் கணிக்க லக்கினம் அவசியம். கோச்சார பலன் கணிக்க ராசி வேண்டும்.


அதாவது பலன்கள்‌ சொல்வதில்‌ இரண்டு முறை இருக்கிறது. பிறக்கும்‌ போது இருக்கும்‌ தசா புத்திகள்‌, கிரக அமைப்புகளை வைத்துச்‌ சொல்வது. மற்றொன்று தற்கால கிரக நிலைகளை வைத்து பலன்‌ கூறுவது.                           

தற்கால கிரக நிலைகளை வைத்துதான்‌ வாரப்பலன்‌, தினப்‌ பலன்‌, வார ராசி,
மாத ராசி, குருப்பெயர்ச்சிப்‌ பலன்களையெல்லாம்‌ கொடுக்கிறோம்‌. தற்கால
கிரக நிலைகளுக்கு வலிமை அதிகம். நல்ல தசா புத்தி நடக்காதவர்களுக்கு
தற்கால கிரக நிலை வலிமையாக வேலை செய்யும்‌. தசா புத்தி பலவீனமாக
இருக்கிறவர்களுக்கு கோச்சார கிரகங்கள்‌, அதாவது தற்போது எங்கெங்கு
நன்றாக இருக்கிறதோ அதுமாதிரி. ஒருத்தருக்கு மோசமான திசை நடக்கிறது
என்று வைத்துக்கொள்வோம்‌. அதாவதுக்குரிய திசை, 8க்குரிய திசை,
பாதகாதிபதி திசை நடந்து அவர்களுக்கு ஏழரைச்‌ சனியும்‌
வந்துவிட்டால்‌ அவருடைய பாடு திண்டாட்டம்தான்‌. அடிமட்டத்திற்குக்‌
கொண்டுபோய்விடும்‌ திண்டாட்டம்தான்‌. அடிமட்டத்திற்குக்‌ கொண்டுபோய்விடும்‌
யோக திசை நடக்கும்‌ போது மோசமான ஏழரைச்‌ சனியெல்லாம்‌ வருகிறதென்றால்‌,
அவர்களை அது காப்பாற்றும்‌. ஏற்பக்கூடிய பாதிப்புகள்‌, அவர்களுக்கு
இல்லாமல்‌ போகும்‌. கோச்சாரப்‌ பலன்களை வைத்துதான்‌ ராசிப்பலன்‌
சொல்கிறோம்‌. ஆனால்‌ அவரவர்கள்‌ பிறந்த நேரத்திற்கு உரிய கிரக
அமைப்புகள்‌ தசா புத்திகளை அடிப்படையாக வைத்து
கோச்சாரப்‌ பலன்களின்‌ எண்ணிக்கை அதிகமாவதோ
குறைவதோ உண்டாகும்‌. அதனால்‌ அவரவர்கள்‌ பிறந்த
ஜாதகம்‌ முக்கியம்‌. அதில்‌ நடக்கும்‌ தசா புத்தியும்‌ முக்கியம்‌.



கோச்சாரம்‌ என்பது அவுட்லைன்‌ மாதிரி. அது
ஒரு ஆழமான விஷயம்‌ கிடையாது. உதாரணத்திற்கு ஒருத்தருடைய 6வது
வீட்டிற்கு சூரியன்‌ வருகிறார்‌. 6ல்‌ சூரியன்‌ வந்தால்‌ திடீர்‌ லாபம்‌,
திடீர்‌ யோகம்‌, அரசாங்கத்தால்‌ பதவி, வழக்குகளில்‌
வெற்றி போன்று உண்டாகும்‌. 3வது வீட்டில்‌ செவ்வாய்‌ உட்கார்ந்தாரென்றால்‌
புதிய முயற்சிகளில்‌ வெற்றி போன்றெல்லாம்‌ உண்டாகும்‌ என்று சொல்கிறோம்‌.
அந்த நேரத்தில்‌ சூரிய திசை, சூரிய புத்தி இருந்ததென்றால்‌ அந்தப்‌ பலன்‌
அப்படியே நடக்கும்‌.சூரியன்‌ சாதகமாக இருந்து சூரிய திசை,
சூரிய புத்தியும்‌ நடந்து கோச்சாரத்திலும்‌ சூரியன்‌ 6வது வீட்டிற்கு வந்தால்‌
அரசாங்கத்தில்‌ பெரிய பதவிகள்‌ கிடைப்பது போன்று
உண்டாகும்‌. - ஆனால்‌, அவருடைய ஜாதகத்தில்‌, சூரியன்‌ பலவீனமாக இருந்து,
சூரியன்‌ கெட்டவராக இருந்தால்‌ நல்ல பலன்கள்‌ கொஞ்சம்‌ குறையும்‌.
அதனால்‌ கோச்சாரப்‌ பலன்களை வைத்து கொடுக்கும்‌
ராசி பலன்களெல்லாம்‌ ஒரு அவுட்‌ லைன்‌ அவ்வளவுதான்‌.
பாடம் 11ல் கிரகங்களின் சஞ்சாரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அத்துடன் கோச்சாரத்தில் கிரகங்கள் நற்பலன்கள் கொடுக்கும்
இடங்களை கீழே படியலிடுகிறேன். நன்கு மனதில் இருத்திக் கொள்ளுங்கள.


சூரியன்:      - ராசியிலிருந்து 3,6,10,11 வீடுகள்
சந்திரன்:      - ராசியிலிருந்து 3,6,7,10,11 வீடுகள்
செவ்வாய்.   - ராசியிலிருந்தது 3,6,10,11 வீடுகள்
புதன்.            - ராசியிலிருந்து 2,4,6,10,11 வீடுகள்
குரு.               - ராசியிலிருந்து 2,5,7,9,11 வீடுகள்
சுக்கிரன்.     - ராசியிலிருந்து 1,2,3,4,5,9,11 வீடுகள்
சனி.               - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்
ராகு.              - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்
கேது.             - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்

சனியின் கோச்சார பலன்கள்:

ராசிக்கு 12ல்‌ சனி வரும்‌ போது 71/2 நாட்டுச்‌ சனி ஆரம்பமாகி
12ம்‌ இடம்‌ ராசி, 2ம்‌ இடம்‌ ஆகிய மூன்று ஸ்தானங்களிலும்‌
71/2 வருடங்கள்‌ சஞ்சரிக்கும்‌ அந்தக்‌ காலம்‌ நல்ல தசாபுத்திகள்‌
நடந்தால்‌ ஒழிய நல்ல பலன்‌ களைப்‌ பார்ப்பது
அரிது. பல துன்பங்களையும்‌, துயரங்‌களையும்‌ அளித்தே
தீரும்‌. அச்சமயம்‌ சனி பகவான்‌ ப்ரீதி செய்வது நல்லது. அவர்‌
ஸ்தலமாகிய திருநள்ளாறுக்கு சென்று பகவான்‌ ப்ரீதி செய்வது
நல்லது. அவர்‌ ஸ்தலமாகிய திருநள்ளாறுக்கு சென்று வரவேண்டும்‌.
ராசிக்கு 4ம்‌ இடத்தில்‌ சனி வரும்‌ போது அர்த்தாஷ்டமச்‌ சனி
என்று பெயர்‌. 7ம்‌ இடத்தில்‌ சனி வரும் போது கண்டச்‌ சனி என்று பெயர்.
8ம் இடத்தில்‌ வரும் போது அஷ்டமச்‌ சனி என்று பெயர். இது காலங்களில் சனியின்
கொடுமை அதிகமாகவே இருக்கும்‌.ஆனால் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,
கன்னி,துலாம்,மகரம் ராசிகளுக்கு அதிக கெடு பலன்களைச் செய்யாது.

Friday, 23 August 2019

பாடம் 30:

ஜாதகம் கணித்தலும் ,பலன் அறிதலும்:

           ஒரு உதாரண ஜாதகம்(கற்பனை ஜாதகம்) கணித்து முழு பலன் அறிதல் குறித்து விளக்குகிறேன்.

ஜாதகர் பெயர்:     xxxx
பிறந்த தேதி:          1-8-2019
பிறந்த நேரம்:         காலை 10 மணி
பிறந்த ஊர்:             சிவகாசி
            ஆண் குழந்தை என எடுத்துக் கொண்டு, பாடம் 28ல் சொல்லியபடி ஜாதகம் கணித்தால் கீழ்கண்டவாறு இருக்கும்.

அடிப்படை விவரங்கள்:




ராசி, நவாம்ச கட்டங்கள்:





கிரக நிலை:




ஜாதகரின் தசா விவரங்கள்:



           இனி பலன் கணிப்பதற்கு முன் கீழ்கண்டவாறு தேவையான விவரங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
லக்னம்:(ல)- கன்னி
ராசி:           கடகம்
நட்சத்திரம்: பூசம் 4ம் பாதம்
தசா இருப்பு: சனி தசா 1வருடம்,11மாதம்.12நாள்.

லக்கின சுபர், யோகர், பாபர், மாரகாதிபதி, பாதகாதிபதி:

பாடம் 6ல் கன்னி லக்கின சுபர்: சுக்கிரன், 
                                                யோகர்: புதன், சுக்கிரன்
                                                 பாபர்: சந்திரன்,செவ்வாய்,குரு
பாடம் 12ல் உபய லக்கினமான கன்னிக்கு 7ம் வீடு மாரகம்,பாதக வீடு. 11ம் வீடு மாரக வீடு. அதன்படி 
மாரகாதிபதி, பாதகாதிபதி: 7ம் வீட்டு அதிபதி குரு
மாரகாதிபதி: 11ம் வீட்டு அதிபதி சந்திரன்

பாதசார அடிப்படையில் கிரகங்களின் வலிமை:


சூரியன்       -  பூசம் 4ம் பாதம். - சனி நட்சத்திரம் - பகை
சந்திரன்.      -  பூசம் 4ம் பாதம் -  சனி நட்சத்திரம் - பகை
செவ்வாய்.   - ஆயில்யம் 3ம் பாதம் - புதன் நட்சத்திரம் -  பகை
புதன்.            - புனர்பூசம் 3ம் பாதம் - குரு நட்சத்திரம் - பகை
குரு.      கேட்டை 2ம் பாதம் - புதன் நட்சத்திரம் - பகை
சுக்கிரன்.     - பூசம் 3ம் பாதம் - சனி நட்சத்திரம்  - நட்பு
சனி.               - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் நட்சத்திரம் - நட்பு
ராகு.              - புனர்பூசம் 1ம் பாதம் - குரு நட்சத்திரம் - சமம்
கேது.             - பூராடம் 3ம் பாதம் -சுக்கிரன் நட்சத்திரம் - சமம்

ராசி,அம்சம் அடிப்படையில் கிரக வலிமை:

  சூரியன் - ராசி, அம்சம் இரண்டிலும் நட்பு வீடு
  சந்திரன் - ராசியில் ஆட்சி, அம்சத்தில் நட்பு வீடு
  செவ்வாய்- ராசியில் நட்பு வீடு, அம்சத்தில் பகை வீடு
  புதன்          - ராசியிலும், அம்சத்திலும் ஆட்சி வீடு அத்துடன்                             வர்கோத்தமும் பெற்றுள்ளது.
  குரு.            - ராசியில் நட்பு வீடு, அம்சத்தில் சம வீடு
  சுக்கிரன்.  - ராசியில் பகை வீடு, அம்சத்தில் ஆட்சி
  சனி.           - ராசியில் சம வீடு, அம்சத்தில் உச்சம்

                     பொதுவாகவே கன்னி லக்கினத்தற்கு புதன் வலிமை பெற்றாலே ஜாதகர் சிறப்புடன் வாழ்வார். தொழிலும் புதன் அடிப்படையிலேயே அமையும்.
                     மேலும் நண்பர்களான சுக்கிரனும், சனியும் நன்முறையில் இருப்பதால் அவர்கள் தசை நன்மை அளிககும்.
                       புதன் வலுப்பெற்றதால் லக்கினமும், 10ம் இட  தொழில் பாவமும் சிறப்படையும்.
                        சுக்கிரன் வலுத்ததால் 2ம் இடமும்,9ம் பாவமும் சிறப்படையும். அவற்றின் காரகத்துவங்கள் தசையில் கிடைக்கும்.
                        செவ்வாய் வலுக்குறைவதாலும்,தனித்த குரு 3ம் இடத்தில் இருப்பதால் 3ம் இட காரகத்துங்கள் முழுமையாக கிடைக்காது.
                          4ம் இடத்தில் கேது இருப்பதால் தாயாருக்கு சிறப்பளிக்காது. மேலும் 4ம் இட அதிபதி குரு 4ம் இடத்தற்கு 12ம் இடத்தில் இருப்பதால் 4ம் இடத்தின் முழுப்பலனும் கிடைக்காது. ஆனால் சனி இருப்பதாலும், புதன் பார்பதாலும்,சிறிது சிரம்மத்தற்குப் பின் பலன் கிடைக்கும்.
                           5ம் பாவ அதிபதி சனி 5ம் பாவத்திற்கு 12ல் இருப்பதால் 5ம் பாவ பலன்கள் சிறிது சிரமத்திற்குபின்
கிடைக்கும்.
                           6ம் பாவ அதிபதி சனியே 6ம் பாவத்தைப் பார்பதால் 6ம் இட தீய பலன்கள் குறையும்.
                             7ம் பாவ அதிபதியான குருவே 7ம் பாவத்தை பார்த்துவிடுவதால் 7ம் பாவம் சிறப்படையும்.
                             8ம் பாவ அதிபதி செவ்வாய் அம்சத்தில் வலிமை இழப்பதால் 8ம் இட தீய பலன்கள் குறையும்.
                             11ம் பாவ அதிபதி சந்திரன் அங்கேயே ஆட்சி பெறுவதால் 11ம் பாவ பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
                              12ம் பாவ அதிபதி சூரியன் சனியின் சாரம்
பெற்று வலுக்குறைவதால் 12 பாவ நீய பலன்கள் குறையும்.
                              பலன் கூறும் பொழுது மேற்கூறியவாறு கணித்து,பின் அந்தந்த பாவத்தின் காரகங்களை பலனாக கூறவேண்டும். எனவே 12 பாவங்களின் காரகத்துவங்களும் நன்கு படித்து மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.
             
                               அடுத்து கிரகங்களின் வலிமையை கணித்துவிட்டதால் தசைகளின் பலனை எளிதாக கூறலாம். பாடம் 29ல் குறிப்பிட்டபடி தசைகளில் புத்தியைக் கொண்டு அவற்றின் வலிமைக்கு ஏற்ப பலன் கூறவேண்டும்.
                                 உதாரணமாக சனி தசையில் புத்திகள் எவை என்பதனை சனி தசையை அழுந்துவதின் மூலம் கீழ்கண்டவாறு காணலாம்.

அதாவது சனி தசையில் கடைசியாக ராகு புத்தி 1.1.2019ல் முடிந்து குரு புத்தி 13.7.2021 வரை உள்ளது என்பதனை அறியலாம்.

            இதுதான் ஜாதகம் கணித்து பலன் சொல்வதின் அடிப்படை. இனி வரும் பாடங்களில் இவை குறித்து மிக விரிவாக பல தரப்பட்ட ஜாதக்கள் மூலம் விளக்குகிறேன்.

முக்கிய குறிப்பு:

  ஜாதகப் புத்தகத்தை எடுத்தவுடன் முதலில் ஜாதகரின் பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை உறுதி செய்தபின் நாமே software( மென்பொருள்) மூலம் ஜாதகம் கணித்து அதன் மூலம் மட்டுமே பலன் சொல்வது சிறந்தது.





Sunday, 18 August 2019

பாடம் 29:

ஜாதக பலன் கணிக்கும் முறை:
             ஜாதக பலன் கணிப்பது என்பது 12 பாவங்களின் வலிமை கணக்கிட்டு அறிவது.

              பாடம் 13ல் பாவங்களின் காரகத்துவங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அந்த காரகத்துவங்கள்தான் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து வருபவை. இந்த 12 பாவங்களில் மனிதனுக்கு துன்பங்களையும், துயரங்களையும் தருபவை 3 பாவங்கள். அவை 6ம் பாவம், 8ம் பாவம், 12ம் ஆகும். இவை துர்(தீய) பாவங்கள் என அழைக்கப்படும்.இந்த பாவங்கள் மட்டும் ஜாதகத்தில் வலிமை அடையக்கூடாது. 3ம் பாவமும் அரை தீய பாவம் என அழைக்கப்படும்.

              பாவங்களின் வலிமை என்பது அந்த பாவங்களின் அதிபதிகள் பெரும் வலிமையைப் பொருத்தது.

              ஒரு பாவ அதிபதி வலிமை அடைய வேண்டுமானால்

1. ஆட்சி,உச்சம்,திக்பலம் பெறவேண்டும்
2. தனது நட்பு வீடுகளில் அமரவேண்டும்
3. சுபர்களுடன் அல்லது அவர்களின் பார்வையில் இருக்க வேண்டும்
4. 6,8,12ம் வீடுகளின் தொடர்பு பெறக்கூடாது.
       இத்துடன்  கிரகங்களை பற்றி சொல்லப் பட்ட 17வது பாடத்தை நன்கு படிக்கவும்.

மேலும் பாவங்களில் பாவகிரகங்களோ, 6,8,12 அதிபதிகளோ அமரக்கூடாது.

இவைகளுடன் நல்ல கிரகங்களின் தசையும் ஜாதகரின் வாழ்நாளில் வரவேண்டும்

அப்பொழுதுதான் ஜாதகர் வாழ்வில் மிக நன்றாக வாழ்வார்.

எனவே ஜாதக பலன் கணிக்க

1. கிரகங்களின் வலிமை அறிதல்
2. பாவங்களில் அமரும் கிரகங்கள் பற்றி அறிதல்
3.  வாழ்நாளில் வரும் கிரக தசைகள் பற்றி அறிதல்

   ஆகிய இவற்றின் முலம் கணித்து ஜாதகருக்கு  எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனை கூறலாம்.

   எந்த எந்த பாவங்கள் வலிமை உடன் உள்ளதோ, அந்த பாவத்தின் அதிபதிகள் தசையில் அந்த பாவங்களின் காரகத்துவம் சிறப்பாக இருக்கும்.  வலிமை அற்ற பாவங்கள் சிறப்பை தராது. எனவே இதுவரை பதிவிட்டுள்ள பாடங்கள் அனைத்தையும் நன்றாக படித்துவந்தீர்களேயானால்  எளிதாக ஜாதக பலன்களை கூறிவிடலாம்.

    அடுத்தடுத்து உதாரண ஜாதகங்கள் மூலம் பலன் கணிப்பது எப்படி என்பதனை விளக்குகிறேன்.




                  

Tuesday, 13 August 2019

பாடம் 28:

ஜாதகம் கணிக்கும் முறை:

           இதுவரை ஜாதகம் கணிப்பதற்கு பஞ்சாகங்கள், பல விதமான கணிதங்களை  ஜோதிடர்கள் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது நிறைய சோதிட மென்பொருள்கள்(software) வந்துவிட்டன. Google Play storeல் இலவச சோதிட மென்பொருள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை பதிவிறக்கம்(download) செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
          சோதிடத்தில் இருவிதமான பஞ்சாங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை (1) வாக்கிய பஞ்சாங்கம் (2) திருக்கணிதப் பஞ்சாங்கம். இவை இரண்டில் திருக்கணிதமே சிறந்தது என்பது பெரும்பான்மையோரின் கருத்து. மேலும் சோதிடமென்பொருள்கள் அனைத்தும் திருக்கணித முறையிலேயே கணிக்கப்படுகின்றன.
            Play storeல் Kundi software என்பதனை உங்கள் computer,laptop,cellphone ஆகிய ஏதாவது ஒன்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இது புதிதாக பயன்படுத்துபவரகளுக்கு எளிதாக இருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது என்பதனை விளக்குகிறேன்

          நீங்கள் மேற்குறித்த மென்பொருளை திறக்கும் பொழுது கீழ் குறித்தவாறு இருக்கும்.

       இதில் தனிப்பட்ட ஜாதகம் என்பதனை அழுத்தினால்  கீழ்கண்டவாறு இருக்கும்.
இதில் நீங்கள் தரவேண்டிய விவரங்கள் ஜாதகரின் பெயர், ஆணா, பெண்ணாஎன்பது, ஆங்கில தேதி,மாதம்,வருடம் மற்றும் பிறந்த நேரம் AM/PM, பிறந்த ஊர்(சிறிய ஊர் என்றால் அருகில் உள்ள நகரத்தை ) தேர்வு செய்த  நகரம் என்ற இடத்தை அழுத்தி அதில் குறிப்பிடவும் . தற்போது 'குண்டலி காண்பியுங்கள்' என்பதனை அழுத்தவும். கீழ் கண்டவாறு மெனு தோன்றும்.    
                                              
      இதில் "ஜாதகம்/ஜாதக வரைபடம் "எனபதனை அழுததினால் லக்ன ஜாதக வரை படம்,  நவாம்ச ஜாதக வரைபடம்    கிடைக்கும்.                                                              
        " அடிப்படை விவரங்கள்" என்பதனை அழுத்தினால்  நாம் கொடுத்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என                    பார்த்துகொள்ளலாம்.                                                                      
"க்ரஹம்,தசை மேலும் பல  "    என்பதனை அழுத்தினால்  கீழ்கண்டவாறு    தோன்றும்.
இதில் 'கிரக நிலை' அழுத்தினால், கிரகங்கங்கள் நிற்கும் ராசி, நட்சத்திரம், போன்ற முக்கியமான விஷயங்கள் கிடைக்கும்.                                                                                    
                                                            
'விம்ஷோத்திரி தசை ' என்பதனை அழுத்தினால், பிறக்கும்போது மீதமிருக்கும் தசைமுதல் வரிசையாக ஜாதகருக்கு நடக்கவிருக்கும் தசைகளை    அறியலாம்.  மேலும் தசையை அழுத்தினால் புத்தி பற்றிய விவரங்கள் கிடைக்கும்.                                                                                          
புத்தி என்பது தசையை 9 பிரிவகளாகப் பிரிப்பது.  முதல் புத்தியாக அந்த கிரகத்தின் தசையும் அடுத்து வரிசையாக  மற்ற கிரகங்களின் புத்தியும் வரும். 
உதாரணமாக ஜாதகரின் முதல் தசை சூரிய தசை என்று வைத்துக்கொண்டால் சூரிய தசையை அழுத்தும் பொழுது முதலில் சூரிய புத்தியும் அடுத்து சந்திர புத்தி,செவ்வாய் புத்தி என வரிசையாக இறுதியில் சுக்கிர புத்தியும் வரும்.
                                                    

இதைப்போல் உங்களது, உங்கள் குடும்பத்திலுள்ளவர்களின் ஜாதகங்களை கணித்துக் கொள்ளலாம். அடுத்த பதிவுகளில் ஜாதக பலன் கணிப்பது எவ்வாறு என்பதனை படிபடியாகப் பாரப்போம். அதற்கு முன் இதுவரை பதிவிட்ட பாடங்களை நன்றாகப் படித்து மனதில் பதிய வைத்திருந்தால் மட்டுமே பலன் கணிப்பது  எளிதாக இருக்கும் .                                        




           
    

Thursday, 8 August 2019

பாடம் 27:   நட்சத்திரங்களின் குணங்கள்:

                        திருமணப் பொருத்தங்களுக்கு நட்சத்திரங்கள் பயன்படுவதால் 27 நட்சத்திரங்களின் குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். அவற்றைப்பற்றி காண்போம்.






















Monday, 5 August 2019

பாடம் 26:  ராசிகளின் பொதுவான குணங்கள்:


                       12 வீடுகளான ராசிக்கட்டங்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனித்தனி குணங்கள் கொண்டுள்ளன. இதனால் ஜாதகரின் குணங்களை கணிப்பது எளிது. 




Friday, 2 August 2019

பாடம் 25:  9. காரகோபாவ நாஸ்தி



பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...