Sunday, 18 August 2019

பாடம் 29:

ஜாதக பலன் கணிக்கும் முறை:
             ஜாதக பலன் கணிப்பது என்பது 12 பாவங்களின் வலிமை கணக்கிட்டு அறிவது.

              பாடம் 13ல் பாவங்களின் காரகத்துவங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அந்த காரகத்துவங்கள்தான் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து வருபவை. இந்த 12 பாவங்களில் மனிதனுக்கு துன்பங்களையும், துயரங்களையும் தருபவை 3 பாவங்கள். அவை 6ம் பாவம், 8ம் பாவம், 12ம் ஆகும். இவை துர்(தீய) பாவங்கள் என அழைக்கப்படும்.இந்த பாவங்கள் மட்டும் ஜாதகத்தில் வலிமை அடையக்கூடாது. 3ம் பாவமும் அரை தீய பாவம் என அழைக்கப்படும்.

              பாவங்களின் வலிமை என்பது அந்த பாவங்களின் அதிபதிகள் பெரும் வலிமையைப் பொருத்தது.

              ஒரு பாவ அதிபதி வலிமை அடைய வேண்டுமானால்

1. ஆட்சி,உச்சம்,திக்பலம் பெறவேண்டும்
2. தனது நட்பு வீடுகளில் அமரவேண்டும்
3. சுபர்களுடன் அல்லது அவர்களின் பார்வையில் இருக்க வேண்டும்
4. 6,8,12ம் வீடுகளின் தொடர்பு பெறக்கூடாது.
       இத்துடன்  கிரகங்களை பற்றி சொல்லப் பட்ட 17வது பாடத்தை நன்கு படிக்கவும்.

மேலும் பாவங்களில் பாவகிரகங்களோ, 6,8,12 அதிபதிகளோ அமரக்கூடாது.

இவைகளுடன் நல்ல கிரகங்களின் தசையும் ஜாதகரின் வாழ்நாளில் வரவேண்டும்

அப்பொழுதுதான் ஜாதகர் வாழ்வில் மிக நன்றாக வாழ்வார்.

எனவே ஜாதக பலன் கணிக்க

1. கிரகங்களின் வலிமை அறிதல்
2. பாவங்களில் அமரும் கிரகங்கள் பற்றி அறிதல்
3.  வாழ்நாளில் வரும் கிரக தசைகள் பற்றி அறிதல்

   ஆகிய இவற்றின் முலம் கணித்து ஜாதகருக்கு  எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனை கூறலாம்.

   எந்த எந்த பாவங்கள் வலிமை உடன் உள்ளதோ, அந்த பாவத்தின் அதிபதிகள் தசையில் அந்த பாவங்களின் காரகத்துவம் சிறப்பாக இருக்கும்.  வலிமை அற்ற பாவங்கள் சிறப்பை தராது. எனவே இதுவரை பதிவிட்டுள்ள பாடங்கள் அனைத்தையும் நன்றாக படித்துவந்தீர்களேயானால்  எளிதாக ஜாதக பலன்களை கூறிவிடலாம்.

    அடுத்தடுத்து உதாரண ஜாதகங்கள் மூலம் பலன் கணிப்பது எப்படி என்பதனை விளக்குகிறேன்.




                  

No comments:

Post a Comment

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...