Tuesday, 13 August 2019

பாடம் 28:

ஜாதகம் கணிக்கும் முறை:

           இதுவரை ஜாதகம் கணிப்பதற்கு பஞ்சாகங்கள், பல விதமான கணிதங்களை  ஜோதிடர்கள் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது நிறைய சோதிட மென்பொருள்கள்(software) வந்துவிட்டன. Google Play storeல் இலவச சோதிட மென்பொருள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை பதிவிறக்கம்(download) செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
          சோதிடத்தில் இருவிதமான பஞ்சாங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை (1) வாக்கிய பஞ்சாங்கம் (2) திருக்கணிதப் பஞ்சாங்கம். இவை இரண்டில் திருக்கணிதமே சிறந்தது என்பது பெரும்பான்மையோரின் கருத்து. மேலும் சோதிடமென்பொருள்கள் அனைத்தும் திருக்கணித முறையிலேயே கணிக்கப்படுகின்றன.
            Play storeல் Kundi software என்பதனை உங்கள் computer,laptop,cellphone ஆகிய ஏதாவது ஒன்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இது புதிதாக பயன்படுத்துபவரகளுக்கு எளிதாக இருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது என்பதனை விளக்குகிறேன்

          நீங்கள் மேற்குறித்த மென்பொருளை திறக்கும் பொழுது கீழ் குறித்தவாறு இருக்கும்.

       இதில் தனிப்பட்ட ஜாதகம் என்பதனை அழுத்தினால்  கீழ்கண்டவாறு இருக்கும்.
இதில் நீங்கள் தரவேண்டிய விவரங்கள் ஜாதகரின் பெயர், ஆணா, பெண்ணாஎன்பது, ஆங்கில தேதி,மாதம்,வருடம் மற்றும் பிறந்த நேரம் AM/PM, பிறந்த ஊர்(சிறிய ஊர் என்றால் அருகில் உள்ள நகரத்தை ) தேர்வு செய்த  நகரம் என்ற இடத்தை அழுத்தி அதில் குறிப்பிடவும் . தற்போது 'குண்டலி காண்பியுங்கள்' என்பதனை அழுத்தவும். கீழ் கண்டவாறு மெனு தோன்றும்.    
                                              
      இதில் "ஜாதகம்/ஜாதக வரைபடம் "எனபதனை அழுததினால் லக்ன ஜாதக வரை படம்,  நவாம்ச ஜாதக வரைபடம்    கிடைக்கும்.                                                              
        " அடிப்படை விவரங்கள்" என்பதனை அழுத்தினால்  நாம் கொடுத்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என                    பார்த்துகொள்ளலாம்.                                                                      
"க்ரஹம்,தசை மேலும் பல  "    என்பதனை அழுத்தினால்  கீழ்கண்டவாறு    தோன்றும்.
இதில் 'கிரக நிலை' அழுத்தினால், கிரகங்கங்கள் நிற்கும் ராசி, நட்சத்திரம், போன்ற முக்கியமான விஷயங்கள் கிடைக்கும்.                                                                                    
                                                            
'விம்ஷோத்திரி தசை ' என்பதனை அழுத்தினால், பிறக்கும்போது மீதமிருக்கும் தசைமுதல் வரிசையாக ஜாதகருக்கு நடக்கவிருக்கும் தசைகளை    அறியலாம்.  மேலும் தசையை அழுத்தினால் புத்தி பற்றிய விவரங்கள் கிடைக்கும்.                                                                                          
புத்தி என்பது தசையை 9 பிரிவகளாகப் பிரிப்பது.  முதல் புத்தியாக அந்த கிரகத்தின் தசையும் அடுத்து வரிசையாக  மற்ற கிரகங்களின் புத்தியும் வரும். 
உதாரணமாக ஜாதகரின் முதல் தசை சூரிய தசை என்று வைத்துக்கொண்டால் சூரிய தசையை அழுத்தும் பொழுது முதலில் சூரிய புத்தியும் அடுத்து சந்திர புத்தி,செவ்வாய் புத்தி என வரிசையாக இறுதியில் சுக்கிர புத்தியும் வரும்.
                                                    

இதைப்போல் உங்களது, உங்கள் குடும்பத்திலுள்ளவர்களின் ஜாதகங்களை கணித்துக் கொள்ளலாம். அடுத்த பதிவுகளில் ஜாதக பலன் கணிப்பது எவ்வாறு என்பதனை படிபடியாகப் பாரப்போம். அதற்கு முன் இதுவரை பதிவிட்ட பாடங்களை நன்றாகப் படித்து மனதில் பதிய வைத்திருந்தால் மட்டுமே பலன் கணிப்பது  எளிதாக இருக்கும் .                                        




           
    

No comments:

Post a Comment

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...