Friday, 28 June 2019

பாடம் 8: ராசிகளில் ஆண்,பெண் அமைப்பு :


             12 ராசிகளில் 6 ராசிகள் ஆணாகவும், 6 ராசிகள் பெண்ணாகவும் கணிக்கப்பட்டுள்ளன. அவை 

ஆண் ராசிகள்:

        மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்


பெண் ராசிகள்:

        ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம்



ராசிகளும்,திசைகளும்:

              4 திசைகளும் 12 ராசிக்கட்டங்களில் கீழ்கண்டவாறு
வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு திசை: மேஷம்,சிம்மம்,தனுசு
தெற்கு திசை : ரிஷபம்,கன்னி,மகரம்
மேற்கு திசை  : மிதுனம்,துலாம்,கும்பம்
வடக்கு திசை  : கடகம்,விருச்சிகம்,மீனம்

ராசிகளில் சரம்,ஸ்திரம்,உபயம் அமைப்புகள்:

சரம் ராசிகள்      :  மேஷம்,கடகம்,துலாம்,மகரம்
ஸ்திரம் ராசிகள்:  ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்
உபயம் ராசிகள் :   மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்




Thursday, 27 June 2019

பாடம் 7:


ஒவ்வொரு கிரகத்திற்குமான நட்பு,சம,பகை கிரகங்களின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. நன்கு மனதில் இருத்திக் கொள்ளுங்கள்

Wednesday, 26 June 2019

பாடம் 6:


ராசிகளில் சுபர்,யோகர்,பாபர்,மாரகர் பற்றிய விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

Monday, 24 June 2019

பாடம் 5:

ராசிகளில் கிரகங்களின் நிலை அட்டவணையாகவும், உச்சம்,நீசம் நிலைகள் தனியாக ராசி கட்டங்களில் எளிதாகப் புரியும்படியும் தரப்பட்டுள்ளது.
பாடம் 4

கிரகங்களுக்கும்,நம் உடல் பாகங்களுக்கும் உள்ள தொடர்புகளும், ராசிக்கும்,நம் உடல் பாகங்களுக்கும் உள்ள தொடர்புகளும், பஞ்ச பூதங்களான நெருப்பு,நீர் போன்றவைகளுக்கும் கிரகங்களுக்குமான தொடர்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையும் நினைவில் கொள்ளுங்கள்.




Sunday, 23 June 2019

  பாடம் 3:   கிரகங்களின் நட்சத்திரங்களும்
   தசா,புத்திகால அளவுகளும்:





கிரகங்களின் நட்சத்திரங்களும் , அவற்றின் தசா,பத்தி கால அளவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதன்படிதான் ஒருவரின் தசாபுத்திகள் வரிசையாக வரும்.

உதாரணமாக ஒருவர் பிறக்கும்போது நடக்கும் தசா செவ்வாய் தசா என்று எடுத்துக் கொண்டால் அவரது அடுத்த தசா ராகு தசாவாக வரும். இப்படியே வரிசையாக வரும்.
 மேலும் 120 வருடம் என்பது ஒருவரின் அதிகபட்ச ஆயுள்.

பாடம் 2 



இவ்வாறு 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு மேற்குறித்தவாறு 12 ராசிக் கட்டங்களிலும் அடக்கப்படுகிறது. ராசிக் கட்டங்களில்
சூரியன், சந்திரன் தவிர மற்ற 5 கிரகங்களும்  இரு வீட்டு ஆதிபத்தியம் பெருகின்றன.
    ராகு,கேதுகளுக்கு வீடுகள் கிடையாது.அவைகள் தாங்கள் இருக்கும் ராசிகளை தங்களது வீடாக்கிக் கொள்கின்றன.

நட்சத்திரங்கள் 27×4 =108 பாகங்கள்.
108 பாகங்களும் ஒரு ராசி கட்டத்திற்கு 9 பாகங்கள் வீதம்  12  ராசிகளில் அடக்கப்படுகின்றன.
உ.ம்:மேஷராசியில் அஸவினி 4 பாதங்களும்,பரணி 4 பாதங்களும்,கார்த்திகை 1 ம் பாதமும் உள்ளன. இது போல் தான் மற்ற ராசிகளிலும்.

      மேலும் 360 பாகைகள் கொண்ட வான ராசி மண்டலம்  12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் 30 பாகைகள் தன்னகத்தில் கொண்டுள்ளது. அத்துடன் ராசிகளுடன் தமிழ், ஆங்கில மாதங்களுக்கும் தொடர்புகள் உள்ளன. அவற்றை கீழ்கண்ட ராசி கட்டங்கள் மூலம் தெளிவு படுத்துகிறேன்.




                                  இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுவிடுகிறேன். அதாவது சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்திலும்,வைகாசியில் ரிஷபத்திலும்,இப்படியாக 12வது மாதத்தில் பங்குனியில் மீனத்திலும் இருப்பார். அதாவது 1 வருடத்தில் ராசி முழுதும் சுற்றி வருவார். இது போல் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தை பின்பு பார்ப்போம்.



     


    

Thursday, 20 June 2019

சோதிடம் பற்றிய முன்னுரை

பாடம் 1:   

                                                                                           சோதிடம் நம் முன்னோர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானில் பல கோள்களில் முக்கியமான 9 கோள்களைக் கொண்டு கணிக்கப்பட்ட ஒரு அற்புதமான கணிதம். இதை எளிய முறையில் விளக்குவதே இதன் நோக்கம். தொடர்ந்து பாடங்களைப் படித்துவந்தீர்களேயானால் நீங்களும் ஒரு சோதிடர் ஆகலாம்.


இன்றைய தினம் சோதிட அடிப்படைகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன். மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

கோள்கள்/கிரகங்கள்-9

1.சூரியன் 2. சந்திரன் 3. செவ்வாய் 4. புதன் 5. குரு 6. சுக்கிரன் 7. சனி 8. ராகு 9. கேது

நட்சத்திரங்கள் -27

1. அஸ்வினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி  5. மிருகசீரிடம் 6. திருவாதிரை 7. புனர்பூசம் 8.  பூசம் 9. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. அஸ்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17. அனுசம் 18. கேட்டை 19.மூலம் 20. பூராடம் 21. உத்திராடம் 22. திருவோணம் 23.த அவிட்டம் 24. சதயம் 25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி

ராசிகள் -12

1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி 7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

            மேற்குறித்த 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்கள் வழியாக  12 ராசிகளிலும் சுற்றி வருகின்றன. 9 கிரகங்களுக்கும் கிரகத்திற்கு 3 நட்சத்திரங்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 கிரகங்களும் 12 ராசிகளில் அடக்கப்பட்டுள்ளன. அவைகளை அடுத்த பதிவில் காணலாம்


             


பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...