பாடம் 2
இவ்வாறு 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு மேற்குறித்தவாறு 12 ராசிக் கட்டங்களிலும் அடக்கப்படுகிறது. ராசிக் கட்டங்களில்
சூரியன், சந்திரன் தவிர மற்ற 5 கிரகங்களும் இரு வீட்டு ஆதிபத்தியம் பெருகின்றன.
ராகு,கேதுகளுக்கு வீடுகள் கிடையாது.அவைகள் தாங்கள் இருக்கும் ராசிகளை தங்களது வீடாக்கிக் கொள்கின்றன.
நட்சத்திரங்கள் 27×4 =108 பாகங்கள்.
108 பாகங்களும் ஒரு ராசி கட்டத்திற்கு 9 பாகங்கள் வீதம் 12 ராசிகளில் அடக்கப்படுகின்றன.
உ.ம்:மேஷராசியில் அஸவினி 4 பாதங்களும்,பரணி 4 பாதங்களும்,கார்த்திகை 1 ம் பாதமும் உள்ளன. இது போல் தான் மற்ற ராசிகளிலும்.
மேலும் 360 பாகைகள் கொண்ட வான ராசி மண்டலம் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் 30 பாகைகள் தன்னகத்தில் கொண்டுள்ளது. அத்துடன் ராசிகளுடன் தமிழ், ஆங்கில மாதங்களுக்கும் தொடர்புகள் உள்ளன. அவற்றை கீழ்கண்ட ராசி கட்டங்கள் மூலம் தெளிவு படுத்துகிறேன்.
No comments:
Post a Comment