Thursday, 20 June 2019

சோதிடம் பற்றிய முன்னுரை

பாடம் 1:   

                                                                                           சோதிடம் நம் முன்னோர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானில் பல கோள்களில் முக்கியமான 9 கோள்களைக் கொண்டு கணிக்கப்பட்ட ஒரு அற்புதமான கணிதம். இதை எளிய முறையில் விளக்குவதே இதன் நோக்கம். தொடர்ந்து பாடங்களைப் படித்துவந்தீர்களேயானால் நீங்களும் ஒரு சோதிடர் ஆகலாம்.


இன்றைய தினம் சோதிட அடிப்படைகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன். மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

கோள்கள்/கிரகங்கள்-9

1.சூரியன் 2. சந்திரன் 3. செவ்வாய் 4. புதன் 5. குரு 6. சுக்கிரன் 7. சனி 8. ராகு 9. கேது

நட்சத்திரங்கள் -27

1. அஸ்வினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி  5. மிருகசீரிடம் 6. திருவாதிரை 7. புனர்பூசம் 8.  பூசம் 9. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. அஸ்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17. அனுசம் 18. கேட்டை 19.மூலம் 20. பூராடம் 21. உத்திராடம் 22. திருவோணம் 23.த அவிட்டம் 24. சதயம் 25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி

ராசிகள் -12

1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி 7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

            மேற்குறித்த 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்கள் வழியாக  12 ராசிகளிலும் சுற்றி வருகின்றன. 9 கிரகங்களுக்கும் கிரகத்திற்கு 3 நட்சத்திரங்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 கிரகங்களும் 12 ராசிகளில் அடக்கப்பட்டுள்ளன. அவைகளை அடுத்த பதிவில் காணலாம்


             


No comments:

Post a Comment

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...