Tuesday, 7 January 2020

பாடம் 37:

ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந

                   எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அறிவு ஏற்படும். 
                   இனி ஜாதகங்களைப் பார்ப்பதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். அது எப்படி என்று விளக்குகிறேன்.
                    முதலில் உங்களின் மற்றும் உங்கள் வீட்டிலுள்ளவர்களின் ஜாதகங்களை எடுத்துக்கொண்டு நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.  அதாவது இதுவரை நடந்த தசைகள் அவற்றால் ஏற்பட்ட நல்ல, கெட்ட பலன்கள் போன்றவற்றை ஆய்வு செய்து, நல்ல, கெட்டபலன்கள் செய்த தசாநாதன்களின் நிலைகுறித்து கணக்கிடவேண்டும். தசாநாதன்கள் எந்த நிலையில் நன்மை அல்லது தீமை செய்கிறார்கள் என்பதை நன்கு கவனிக்கவேண்டும்.  நீங்கள் படித்தவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஒவ்வொன்றையும் பொறுமையுடன் ஆய்வு செய்ய வேண்டும்.  அத்துடன் நண்பர்கள், சொந்தகாரர்கள் ஆகியோரின் ஜாதகங்களையும் ஆய்வு செய்து பலன்களை பார்க்கவேண்டும். இவ்வாறு ஆய்வு செய்யும்போது உங்களின் பலன் சொல்லும் அறிவு மேன்படும்.
                      மேலும் உங்களின் ஜோதிட அறிவு மேன்பட சிறந்த சோதிடர்களின் கட்டுரைகள் மற்றும் YouTube சேனல்களைப் பாருங்கள்.  குறிப்பாக AUDITYA GURUJI என்னும் APP, Google Play Storeல்இருக்கிறது. அதை Download செய்துவைத்துக் கொண்டீர்களேயானால் அவர் போடும் YouTube சேனல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இதனால் உங்களின் ஜோதிட அறிவு மென்மேலும் வளரும்.
                      இதைப் புரிந்து படித்த அனைவரும் சிறந்த சோதிடர்ஆவர் என்பது உறுதி. வாழ்த்துக்கள். 

Sunday, 29 December 2019

பாடம் 36:

ஜாதகமும், திருமணப் பொருத்தமும்:

                  திருமணங்களுக்கு நட்சத்திரப் பொருத்தம் பார்பது தற்போது நடைமுறை. இதற்காக நிறைய புத்தகங்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றின் மூலம் பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் எத்தனை பொருத்தங்கள் உண்டு, பொருத்தம் உண்டா இல்லையா என்பதனை உடனே அறிந்துகொள்ளலாம். 
                  ஆனால் தெளிவான முறையில் பார்க்க வேண்டும் என்றால் இருவரின் ஜாதகங்களையும் ஆய்வு செய்யவேண்டும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் தோல்வியில் முடிவடைவதற்கு முக்கிய காரணம் கருத்து வேற்றுமையே. அதனால்தான் இருவரின் ஜாதகத்தையும் நன்கு ஆய்வு செய்து பொருத்தமான ஜாதகங்களை மட்டுமே இணைக்கவேண்டும். அதைப்பற்றி கீழே விளக்குகிறேன். 
                 
                   ஜாதகத்தில் திரிகோண அதிபதிகள் (1,5,9ம் வீடுகள்) அதிநட்பாக வருவர். எனவே லக்னம், ராசி திரிகோணங்களில் வரும் ஜாதகங்களையே இணைக்கவேண்டும். 
                   உதாரணமாக ஆணின் லக்னம் மேஷம் என்றால் பெண்ணின் லக்னம் மேஷம், சிம்மம், தனுசு இவற்றில் ஒன்றாக இருக்கவேண்டும். இதேபோல் ஆணின் ராசி மிதுனம் என்றால் பெண்ணின் ராசி மிதுனம், துலாம், கும்பம் இவற்றில் ஒன்றாக இருக்கவேண்டும். இதேபோல் பெண் லக்னம், ராசிக்கும் பார்கவேண்டும். இவ்வாறு இணைக்கும்போது அவர்களின் குணநலன்கள் பொருத்தமாகவும், நட்புடனும் இருக்கும். எனவே நட்புக்கிரகங்களின் அடிப்படையில் இணைப்பதைவிட திரிகோண அமைப்பே சிறந்தது. 
                  அடுத்து இருவரின் 2ம்,7ம் வீடுகள் மற்றும் அதிபதிகள் நல்ல நிலையில் இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.  2ம் இடம் என்பது 7ம் இடத்திற்கு 8ம் இடம். அதாவது தனக்கு வரும் கணவன் மற்றும் மனைவியின் ஆயுளைப்பற்றி அறிய பயன்படும் இடம். குறிப்பாக பெண்களுக்கு 8ம் வீடு நன்றாக இருக்கிறதா என பார்க்கவேண்டும். ஏனெனில் 8ம் இடம் 7ம் இடத்திற்கு இரண்டாமிடம். அதாவது கணவனால் வரும் குடும்ப வாழ்க்கைபற்றி அறிய பயன்படும் இடம். 
                   அடுத்து இருவரின் ஆயுள் பலம், வரும் தசைகள், போக அமைப்பு, போன்றவற்றை கவனமாக ஆய்வு செய்யவேண்டும். 
                   மேலும் 11ம்இட அதிபதி வலிமை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் அது இளைய தாரம் பற்றி குறிப்பிடுவது.
                    மேலும் இருவருக்கும் செவ்வாய் தோஷம் முழுமையாக உள்ளதா இல்லை பரிகார செவ்வாய் தோஷமா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் செவ்வாய் தோஷம் முழுமையான ஜாதகத்தை முழுமையான ஜாதகத்துடனும், பரிகார செவ்வாய் தோஷம் உள்ளதை அவ்வாறே பரிகார தோஷத்துடன் இணைக்கவேண்டும். செவ்வாய் தோஷம் பற்றி கீழே விரிவாக விளக்குகிறேன்.
                     இவ்வாறு இரு ஜாதகங்களையும் ஆய்வு செய்து பொருத்தமானவற்றை மட்டும் இணைத்தால் சிறப்பு.

செவ்வாய் தோஷம்:

                       செவ்வாய் தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12ம் இடங்களில் இருப்பது. இது முழுமையான செவ்வாய்தோஷமாகும். இவ்வாறு இருக்கும் செவ்வாயுடன் பாபக்கிரகங்கள் இணைந்தால், பார்த்தால், மற்றும் குரு பார்வை பெற்றால் செவ்வாய் தோஷம் பாதியாக குறைந்துவிடும். இதுவே பரிகார செவ்வாய் தோஷம். மேலும் செவ்வாய் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகியவற்றில் இருந்தாலும் அது பரிகார செவ்வாய் எனப்படும். 
                    
              

Sunday, 22 December 2019

பாடம் 35:

ஜோதிடத்தில் யோக அமைப்புகள்:

                ஜோதிடத்தில் 100க்கும் மேற்பட்ட யோக அமைப்புகள் சொல்லப்பட்டுள்ளன.  அவற்றில் முக்கியமான சிலவற்றை கீழே தருகிறேன். படித்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.









Friday, 13 December 2019

பாடம் 34:

பாப கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்புகள்:

                பொதுவாக ஜாதகத்தில் லக்ன பகை மற்றும் பாவ கிரகங்கள் அவற்றின் தசைகளில் ஜாதகருக்கு தீய பலன்களைச்செய்யும். ஆனால் சில அமைப்புகளில் நல்ல பலன்களை செய்வதை காணலாம். இதை புரிந்து கொண்டால் துல்லியமாக பலன்களை கணிக்கலாம். அது பற்றி விளக்குகிறேன். 

-----லக்ன பகை, பாப கிரகங்கள் லக்னத்திற்கு 3,6,10,11ஆகிய உபஜெய பாவங்களில் நின்று அந்த பாவங்கள் அவற்றின் நட்பு வீடுகளாக இருந்து, இயற்கை சுபர்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகிய கிரகங்களில் குறைந்தது ஏதாவது ஒன்றின் பார்வை அல்லது இணைவு பெற்றிருந்தால் அவற்றின் தசையில் தன் காரக மற்றும் தனது பாவத்தின் காரகத்துவங்கள் முழுமையாகவும், சிறப்பாகவும் கிடைக்கச்செய்யும். பார்க்கும் சுபர் வலிமையுடன் இருந்தால் சிறப்பு.
       உதாரணமாக கும்ப லக்னத்தை எடுத்துக்கொள்வோம். லக்னத்திற்கு 6ம் பாவ அதிபதி சந்திரன் லக்னத்திற்கு பகைவர். எனவே அவரின் தசை கடன், நோய், வேலை இழத்தல், தொழிலில் நஷ்டம் போன்ற கெடு பலன்களை செய்யும். இந்த சந்திரன் லக்னத்திற்கு 3ம் வீடான மேஷத்தில் நட்புடன் இருக்கும்போது குரு தனது வீடான தனுசுவிலிருந்து 5ம் பார்வையால் பார்த்துவிட்டால் சந்திர தசை ஜாதகருக்கு தாயாரின் சொத்து அல்லது தாய்வழி உறவினர் மூலம் நல்ல உதவிகள் பெற்று அல்லது வங்கி கடன் மூலம் தொழில்செய்து சிறப்படைவார். நோய்களிலிருந்து விடுபடுவார். இவ்வாறு சந்திரனின் காரகத்துவம் மற்றும் 6ம்வீட்டின் காரகத்துவங்கள் மூலம் சிறப்படைவார்.
இதுபோல் 6,10,11 பாவங்களையும் கணிக்கலாம்.

-----கிரகங்கள் தனது பாவங்களுக்கு 6,8,12ல் மறைந்தால்அவர்களின் தசை நல்ல மற்றும் கெடுபலன்களை செய்யாது.  இயற்கை சுபர் களின் பார்வை, இணைவு ஏற்பட்டால் அவற்றின் காரகத்தின் வழியில் தனது பாவத்தின் காரக பலன்களை முழுமையாக செய்யும்.
      உதாரணமாக மேலே குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். சந்திரன் 11ம் வீட்டில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். 11ம் வீடு சந்திரனின் 6ம் வீட்டிற்கு 6ம் வீடு. எனவே சந்திர தசையில் 6ம் வீட்டின் கெடுபலன்களை நடக்காது. இயற்கை சுபர் பார்த்தால் மேற்குறித்த நல்ல பலன்கள் நடக்கும்.

-----இயற்கை பாவர்களான சனி, செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றால் அவர்களின் தசையில் அவர்களின் கொடிய காரகத்துவங்கள் நடைபெறும். ஆனால் ஜாதகத்தில் எந்த பாவங்களுக்கு அவர்கள் அதிபதியோ அந்த இடங்கள் மேம்படும்.
       உதாரணமாக துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்ற சனியின் தசையில் ஜாதகர் அதிஷ்டங்களை அடையமாட்டார். ஆனால் சனி 4,5 இடங்களுக்கு அதிபதி என்பதால் சனி தசையில் ஜாதகரின் மக்கள் நன்றாக இருப்பார்கள். புத்திரர்கள்,கல்வி,தாயார் வழியில் ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும். அதாவது 4,5ம் இடங்கள் மேன்மை அடையும்.

-----ஒரு ஜாதகத்தில் பாவக் கிரகங்கள் பலம் பெறுவது எவ்வாறு நன்மை செய்யும் என்றால், நமது ஜோதிட விதிகளின்படி ஒரு தசை நன்மையான பலன்களைத்தர வேண்டும் எனில் அந்த தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம்  வலிமை அடைய வேண்டும் என்பது முக்கியமானது.
      அதன்படி இயற்கை பாவர்களான சனி, செவ்வாயின் ராசிகளான  மகரம், கும்பம், மேஷம், விருச்சிகத்தில் அமர்ந்து தசை நடத்தும் ஒரு கிரகம் நற்பலனைத்தரவேண்டும் என்றால் என்றால் அந்த கிரகத்துக்கு வீடு கொடுத்த சனியும், செவ்வாயும் வலுப்பெற வேண்டும்.
       உதாரணமாக ராகு சனியின் வீடான மகரத்தில் 3 அல்லது 11ம் இடமாக அமர்ந்து அதன் தசை பெரிய பண வரவை அளிக்கவேண்டும் என்றால் சனி துலாத்தில் உச்சவலு பெறவேண்டும். 

Thursday, 3 October 2019

பாடம் 33:

ராகு, கேது காரகத்துவங்கள்:

ஒரு கிரகத்தின்‌ செயல்பாடுகள்‌ எனப்படும்‌ காரகத்துவங்களை வைத்து
அடையாளப்‌ படுத்தப்‌படுகையில்‌ வேத ஜோதிடத்தில்‌ ராகு போகக்‌காரகன்‌ என்றும்‌ கேது ஞானக்‌காரகன்‌ என்றும்‌ குறிப்பிடப்‌படுகிறார்கள்‌.

அதுபோலவே ராகு என்பவர்‌ ஒருநிலையில்‌ போகக்‌காரகனாகவும்‌, இன்னொருநிலையில்‌ சாதுரியமாகஏமாற்றும்‌ கிரகமாகவும்‌ செயல்படுவார்‌. அதாவது, தான்‌ ஏமாறுகிறோம்‌ என்பதே தெரியாமல்‌ தன்னிடம்‌ சந்தோஷமாக ஏமாந்து செல்பவர்களை உண்டாக்கும்‌ திறமையை ராகு அளிப்பார்‌.

கிரகங்களிலேயே ராகு ஒரு பச்சோந்திக்‌ கிரகம்‌ ஆவார்‌. தான்‌ இருக்கும்‌ வீட்டினை ஒட்டி தனது குணத்தையும்‌, இயல்பையும்‌ அப்படியே மாற்றிக்‌ கொள்வார்‌. மேஷம்‌, ரிஷபம்‌, கடகம்‌, கன்னி, மகரம்‌, ஆகிய ஐந்து ராசிகளைத்‌ தவிர்த்து மற்ற ராசிகளில்‌ ராகு இருக்கும்‌ நிலையில்‌, நீங்கள்‌ ராகு இருக்கும்‌ ராசியதிபதியின்‌ செயல்கள்‌ராகுவின்‌ தசையில்‌ நடப்பதை உணர முடியும்‌.

என்னவெனில்‌ ராகுவுடன்‌ மிக நெருக்கமாக இணையும்‌ கிரகம்‌ முழுமையாக ராகுவிடம்‌ சரணடைந்து வலிமை இழக்கும்‌ என்பதுதான்‌. இதுபோன்ற வலுக்கட்டாயமாகப்‌ பறிக்கும்‌ வேலைகளையும்‌, மற்றக்‌ கிரகத்தை ஆக்கிரமிக்கும்‌ வேலைகளையும்‌ கேது செய்வது இல்லை. கேதுவுடன்‌ மிக நெருக்கமாக இணையும்‌ ஒரு கிரகம்‌ ஒருபோதும்‌ தனது சக்திகளை முழுக்க இழப்பது இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை ஜாதகருக்குத்‌ தரும்‌ வலிமை அந்தக்‌ கிரகத்திற்கு இருக்கவே செய்யும்‌.


ராகு, கேதுக்கள்‌ முதலில்‌... 

தன்னுடன்‌ இணைந்த கிரகத்தின்‌ பலனையும்‌, அடுத்து தான்‌ இருக்கும்‌ வீட்டின்‌ அதிபதியின்‌ பலனையும்‌, பின்னர்‌ தன்னைப்‌ பார்த்த கிரகம்‌, அதன்பிறகு தான்‌ அமர்ந்த சாரநாதனின்‌ பலன்‌ இறுதியாக தனக்கு கேந்திரங்களில்‌ இருக்கும்‌ கிரங்களின்‌ தன்மை அல்லது தனது சாரத்தில்‌ அமர்ந்த கிரகங்களின்‌ தன்மைகளையே செய்கின்றன. இந்த வரிசைப்படியே அவைகளின்‌ தசையில்‌ பலன்கள்‌ நடக்கும்‌.

ராகு என்பது ஆழமான, ஒளிபுக முடியாத, எதையும்‌ பார்க்க முடியாத ஒரு இருட்டு என்பதால்‌ அதனுடன்‌ இணையும்‌ ஒரு கிரகத்தின்‌ ஒளி வெளியே தெரிய முடியாது. ராகுவிடமிருந்து அந்தக்‌ கிரகத்தின்‌ ஒளி தப்பித்து அந்த மனிதனுக்கு நன்மைகளையோ, தீமைகளையோ செய்ய முடியாது.


ஒளி உட்புக முடியாத, ஒரு ஆழமான இருட்டின்‌ கடினமான, கருப்பான மையப்‌பகுதி ராகு என்றால்‌, அதன்‌ மையத்தில்‌ இருந்து விலக விலக, இருள்‌ குறைந்து கொண்டே வந்து ஒளியும்‌, இருளும்‌ சங்கமிக்கும்‌ லேசான ஆரஞ்சு நிறமான ஓரப்‌ பகுதி கேது ஆவார்‌. இதன்‌ காரணமாகவே நமது மூலநூல்கள்‌ ராகுவை கரும்பாம்பு என்றும்‌, கேதுவை செம்பாம்பு என்றும்‌ குறிப்பிடுகின்றன.


ஆனால்‌ கேது என்பது ஆழமற்ற, நாம்‌ ஊடுருவிப்‌ பார்க்கக்கூடிய, மேலோட்டமான இருட்டு என்பதால்‌ கேதுவுடன்‌ இணையும்‌ ஒரு கிரகத்தின்‌ சுய ஒளி ஓரளவு உயிர்ப்புடன்‌, தாக்குப்‌ பிடிக்கும்‌ திறனுடன்‌ இருக்கும்‌. முழுக்க முழுக்க அந்தக்‌ கிரகத்தின்‌ ஒளி கேதுவுக்குள்‌ அமிழ்ந்து விடுவதில்லை, மறைந்து விடுவதில்லை. எனவே கேதுவுடன்‌ இணையும்‌ ஒரு கிரகத்திற்கு நன்மை, தீமைகளைச்‌ செய்யும்‌ தகுதி இருக்கும்‌.


ஜோதிடத்தில்‌ ராகு-கேதுக்கள்‌ இரண்டு கிரகமாக குறிப்பிடப்பட்டாலும்‌ இவை இரண்டிற்குமிடையே கண்ணுக்கு தெரியாத ஒரு இணைப்பு இருப்பதால்தான்‌ இவைகள்‌ ஒரு பாம்பினைப்‌ போல நீளமான ஒரு கோடாக உருவகப்படுத்தப்பட்டு ராகு பாம்பின்‌ தலையாகவும்‌, கேது பாம்பின்‌ வாலாகவும்‌ நமக்கு உணர்த்தப்பட்டது.


பூமி சூரியனைச்‌ சுற்றும்‌ நேரான சுற்றுப்பாதையின்‌ குறுக்காக சற்றுச்‌ சாய்வாக சந்திரனின்‌ பாதை அமைகிறது. இதில்‌ மேலே அமைந்த நிழல்‌ ராகுவாகவும்‌, கீழே உள்ளது கேதுவாகவும்‌ அமைந்தது.


பூமி சூரியனைச்‌ சுற்றி வரும்‌ சுற்றுப்பாதையும்‌, சந்திரன்‌ பூமியைச்‌ சுற்றி வரும்‌ விரிவுபடுத்தப்பட்ட சந்திரப்‌பாதையும்‌, பூமியின்‌ நிழலும்‌, சந்திரனின்‌ நிழலும்‌, வெட்டிக்‌ கொள்ளும்‌ புள்ளிகளே ராகு-கேதுக்கள்‌ எனப்படுகின்றன.


பொருள்‌ தரும்‌ விஷயத்தில்‌ ராகுவிற்கும்‌, கேதுவிற்கும்‌ உள்ள வேறுபாடு என்னவெனில்‌ எப்படி இந்த பணம்‌ வந்தது என்று மறைமுகமான வழிகளில்‌, வெளியில்‌ சொல்ல முடியாத அளவிற்கு ராகு பணம்‌தருவார்‌ என்றால்‌ வெளிப்படையாகச்‌ சொல்லக்‌ கூடிய கவுரவமான வழிகளில்‌ கேது பணத்தைத்‌ தருவார்‌. அதுபோலவே தோஷ அமைப்புக்களிலும்‌ ராகுவைப்‌ போல கடுமையான கெடுபலன்களை கேது செய்வது இல்லை.


லக்னத்தோடும்‌, அஷ்‌டமாதிபதியோடும்‌ ஒரே நேரத்தில்‌ ராகு சம்பந்தப்படும்‌ நிலையில்‌ ஜாதகரை சுயமரணம்‌ எனும்‌ முடிவைத்‌ தேட வைக்கிறார்‌. இப்படி ஒருவர்‌ தற்கொலை முடிவெடுக்கும்‌ நிலையில்‌ அஷ்‌டமாதிபதியை ராகு மிகவும்‌ நெருங்கி முற்றிலும்‌ பலவீனப்படுத்தி இருப்பார்‌.


மேற்கண்ட அமைப்பில்‌ எட்டுக்குடையவன்‌ பாபக்கிரகமாக இருந்தாலோ, இவர்களுடன்‌ ஆறுக்குடையவரும்‌ சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம்‌.


இன்னும்‌ ஒரு முக்கிய நிலையாக குழந்தைப்‌பருவத்தில்‌ வரும்‌ ராகு தசை, சிறுவயது சுக்கிர தசையைப்‌ போலவே நன்மைகளைத்‌
தராது. அதிலும்‌ பள்ளிப்‌பருவத்தில்‌ ஒரு குழந்தைக்கு வரும்‌ ராகுவின்‌ தசை, அக்‌குழந்தையின்‌ கல்வி பயிலும்‌ ஆர்வத்தைக்‌ குறைக்கும்‌.

இதுபோன்ற அமைப்பில்‌ அந்த மாணவனோ, மாணவியோ படிப்பைத்‌ தவிர்த்து விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களில்‌ அதிக ஈடுபாடு

கொள்வார்கள்‌. சில நிலைகளில்‌ இளம்பருவத்தில்‌ வரும்‌ ராகுவின்‌ தசை
கல்வியில்‌ தடைகளை ஏற்படுத்தும்‌.

சிறுவயதில்‌ நமக்கு பள்ளிப்‌ படிப்பைத்‌ தவிர வேறு எந்த வேலைகளும்‌ இக்‌ காலத்தில்‌ இல்லை என்பதால்தான்‌, அதற்கான முரண்பாடான போகக்‌காரக ராகுவின்‌ தசை நடக்கும்‌ போது கல்வியில்‌ தடை, படிப்பு சரிவர வராதது போன்ற பலன்கள்‌

நடக்கின்றன.

இன்னொரு முக்கிய நிலையாக இளம்‌ பருவத்தில்‌ காமத்தை அறிமுகப்‌

படுத்துவதும்‌, ஒரு பெண்ணை காதல்‌ என்ற பெயரில்‌கற்பிழக்கச்‌ செய்வதும்‌ இந்த ராகு, கேதுக்கள்‌ தான்‌.

அதிலும்‌ பள்ளியிறுதி, கல்லூரி போன்ற வயதில்‌ இருக்கும்‌ இளம்‌ பெண்களுக்கு சுக்கிரனின்‌ வீடுகளில்‌ அமர்ந்த ராகு, கேதுக்களின்‌ தசையோ, புக்தியோ அல்லது சுக்கிரன்‌ மற்றும்‌ ஆறு, எட்டாம்‌ அதிபதிகளோடு சம்பந்தப்பட்ட நிழல்‌ கிரகங்களின்‌ தசா, புக்திகள்‌ நடைபெறுமாயின்‌ பெற்றோர்கள்‌ மிகக்‌கவனமாக இருக்க வேண்டும்‌.


அருள்‌ அணி, பொருள்‌ அணி என இரண்டு பிரிவாகப்‌பிரிக்கப்படும்‌ குரு, சுக்ர தலைமையிலான இரண்டு பிரிவுகளுக்கிடையே, குருவின்‌ நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாயின்‌ லக்னங்களுக்கும்‌, குருவின்‌

லக்னங்களுக்கும்‌ சாதகமாகச்‌ செயல்படும்‌ குணத்தைக்‌ கொண்டவர்‌ கேது.

ராகுவும்‌, கேதுவும்‌ ஒரு நேர்கோட்டின்‌ இரண்டு எதிரெதிர்‌ முனைகள்‌

என்பதை வேத ஜோதிடம்‌ ஏற்கெனவே நமக்குதெளிவுபடுத்தி இருக்கிறது.

லக்னத்துடனோ, ராசி எனப்படும்‌ சந்திரனுடனோ சுபத்துவமும்‌, சூட்சும வலுவும்‌ பெற்று கேது சம்பந்தப்படுவாரே எனில்‌, ஒருவரால்‌ பிரம்மத்தை

உணரும்‌ ஞானியாக முடியும்‌. போலித்தனமற்ற, பற்றற்ற, உண்மையான, உலகை உய்விக்க வந்த ஞானப்‌ பெரியார்கள்‌ கேதுவால்‌ உருவாக்கப்பட்டவர்கள்‌.

குறிப்பாக கோவில்களில்‌ ஆழ்வார்கள்‌, நாயன்மார்கள்‌வரிசையில்‌ அவர்களுக்குக்‌ கீழே எழுதப்பட்டிருக்கும்‌ அவர்களது பிறந்த மாதம்‌ மற்றும்‌ நட்சத்திரக்‌ குறிப்புகளைப்‌ பார்த்தீர்களேயானால்‌

அவைகள்‌ பெரும்பாலும்‌ அஸ்வினி, மகம்‌, மூலம்‌, சதயம்‌, சுவாதி என ராகு-கேதுக்களின்‌ நட்சத்திரமாகவே குறிப்பிடப்பட்டிருக்கும்‌.

அதைவிட மேலாக நமது உன்னத மதத்தின்‌ தலைவனும்‌, நாயகனும்‌, நம்‌
எல்லோருக்கும்‌ அம்மையப்பனாக விளங்கும்‌ சர்வேஸ்வரன்‌ அவதரித்ததே ராகுவின்‌ திருவாதிரை நட்சத்திரத்தில்தான்‌ என்பது
ஒன்றே போதும்‌ ராகுவின்‌ மகத்துவத்தை விளக்குவதற்கு.

இன்னுமொரு சிறப்பாக பனிரெண்டு வீடுகளுக்குள்‌ அடங்கும்‌ இருபத்தியேழு நட்சத்திரங்களில்‌, சில கிரகங்களின்‌ நட்சத்திரங்கள்‌

உடைபட்டு இரண்டு ராசிகளில்‌ விரவிக்‌ கிடக்கும்‌ நிலையில்‌ ராகு-கேதுக்களின்‌ ஆறு நட்சத்திரங்களும்‌ துண்டாகாமல்‌ ஒரு ராசிக்குள்‌ முழுமையாக அமைவதும்‌ இந்த சாயாக்‌ கிரகங்களின்‌ சிறப்புத்தான்‌

Monday, 2 September 2019

பாடம் 32:

பாவக காரகத்துவங்களின் பொது விதிகள்:

     ஒவ்வொரு பாவக காரகத்துவத்திற்கும் சில பொது விதிகள் உள்ளன. அவற்றையும் தெரிந்து கொண்டால் உதாரண ஜாதகங்களை விளக்கும்போது பலன்களை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். வரிசையாக ஒவ்வொரு பாவமாக பார்ப்போம்.


1வது பாவம்(லக்னம்): 

        லக்னம் பாவத்தின் முக்கியமான காரகத்துவம் ஆயுள்.

ஆயுளைக் கணிக்க சில பொது விதிகள்.

1) 3ம் பாவம், 8ம் பாவ அதிபதிகள் கேந்திரம்(1,4,7,10ம் பாவங்கள்), திரிகோணங்களில் (1,5,9ம் பாவங்கள்) அமர்வது.

2) லக்கினத்தை குரு பார்ப்பது.

3) லக்கினத்தில் லக்கின சுபர்கள் அமர்வது, பார்பது.

4) ஆயுள் காரகனாகிய சூரியன் வலுவுடன் இருப்பது.

5) லக்கினாதிபதி வலுப்பெற்றிருப்பது.

               மேற்குறித்த அமைப்புகளுக்கு மாறாக லக்கினத்தில் பாபர்கள் அமர்வது, லக்னத்தின் முன்னும் பின்னும் பாபர்கள் இருப்பது ஆயுள் வலுவை குறைக்கும்.

              பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி சுபத்தன்மையுடன் வலுப்பெற்றால் அந்த ஜாதகர் எப்படியும் நல்வாழ்வு பெற்றுவிடுவார்.

2ம் பாவம்:

  1.        2ம் பாவத்திற்கு காரகர்களான குரு (தனம்,குடும்பம்)
, புதன்(கல்வி,வாக்கு) ஆகியோர் சுப வலுவுடன் இருக்கவேண்டும்.

  2.         2ல் பாவ கிரகம் உச்சம் பெறக்கூடாது. ஏனெனில் 7ம் பாவ களத்திர ஸ்தானத்திற்கு ஆயுள் ஸ்தானமான 8ம் இடம்.


3ம் பாவம்:

1.          3ம் பாவத்தில் சகோதரகாரகனான செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் இளைய சகோதர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.

2.           செவ்வாய் லக்கினாதிபதியை விட வலிமை பெற்றிருந்தால், ஜாதகரை விட சகோதர்கள் நன்றாக இருப்பர். மாறாக இருந்தால் சகோதர்களை விட ஜாதகர் நன்றாக இருப்பார்.


4ம் பாவம்:

1. பெற்ற தாய் - காரகர் சந்திரன்

2. வீடு, ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்,ஆடம்பரப் பொருட்கள் - காரகர் சுக்கிரன்

3. நிலம், பூமியை தோண்டும் எந்திரங்கள் - காரகர் செவ்வாய்

4. சரக்கு ஏற்றும் வாகனங்கள், கழிவு அள்ளும் வாகனங்கள் - காரகர் சனி

5. வித்தை(கூரிய அறிவுத்திறன்) - காரகர் புதன்


5ம் பாவம்:

1. புத்திர பாக்கியம் - காரகர் குரு.

2. தர்ம ஸ்தான (9ம் பாவம்) அதிபதியும், கர்மாதிபதியும்(10ம் பாவம்) 5ம் பாவம்,5ம் பாவ அதிபதி அல்லது லக்னம்,லக்னாதிபதியுடன் இணைந்தால்  கர்மம் செய்ய புத்திரன் உண்டு.

3. காதல் : 5ம் பாவம் அல்லது 5ம் பாவ அதிபதி சுக்கிரனுடனோ, 7ம் பாவம், 7ம் பாவ அதிபதி, லக்கினம், லக்கினாதிபதியுடன் தொடர்பு காதலைக் குறிக்கும்.

6ம் பாவம்:

1. லக்கின பாபர்கள் இந்த பாவத்தில் நின்று கெட்டு விட்டால் அவர்கள் திசை நன்மையளிக்கும்.

2. 6ம் இடம் 3,6,10,11 என்ற உபஜெய அமைப்பிலும்,  3,6,9,12 என்ற ஆபோக்கிலீய அமைப்பிலும் வருவதால் பொது பாவர்கள் இங்கு நிற்பது நல்லது.

3. சொந்த தொழில் பற்றி அறிய :  6ம் பாவம் 10ம்பாவத்தை விட வலுக்குறைந்து , சனி, சூரியனை விட வலுக்குறைவது.

3. காரகர் : சனி


7ம் பாவம்:

1. காரகர் : சுக்கிரன்

2. இதில் சனி அமர்ந்தால் தாமத திருமணமும், களத்திர தோஷமும் அதிகமாக இருக்கும். ஆனால் 7ம் பாவம் சனியின் வீடாக இருந்தால் பெருமளவு பாதிப்பு இருக்காது.

3. 7ம் பாவத்திற்கு 8ம் பாவமான 2ம் வீட்டில் பாவ கிரகம் உச்சமாக இருந்தால் கணவன் அல்லது மனைவிக்கு ஆயுள் பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருவரின் ஆயுள் பற்றி ஆராய வேண்டும்.


8ம் பாவம்:

1. இந்த பாவ அதிபதி வலு இழந்தால் ஆயுள் பலம் குறையும், வலுப்பெற்றால் இருக்கும் பாவத்தை வலு இழக்கச் செய்வார். எனவே சம பலத்தில் இருக்க வேண்டும்.

2. இதன் அதிபதி கேந்திர,திரிகோணங்களில் இருப்பது ஆயுள் வலுவைக் கூட்டும்.

3. 8ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் அடிக்கடி கண்டங்கள்,காயங்கள்,ரத்தம் சிந்தும் வெட்டுக்காயம், நெருப்பினால் சுட்டுக் கொள்ளுதல் ஏற்படும்.

4. சனி இருந்தால் நித்திய கண்டம்,பூர்ண ஆயுள்.

5. காரகர் - சனி.


9ம் பாவம்:(தர்ம ஸ்தானம்)

1. தந்தைக்கு காரகர் : சூரியன்


10ம் பாவம்:(கர்ம ஸ்தானம்)

1. காரகர்கள் - சூரியன், சனி.

           ஜாதகத்தில் வலிமையான கிரகங்களின்  அடிப்படையில் தொழில் அமையும். இதேபோல் தொழில் ஸ்தான அதிபதியுடன் இணைந்த கிரகங்களில்
 வலுப்பெற்ற கிரகத்தின் அடிப்படையிலும் தொழில் அமையலாம். மேலும் 10க்கு உரிய கிரகம் ராசியில் எவர் வீட்டில் அமர்ந்துள்ளாரோ அவருடைய தொழில்கூடஅமையும்.
           இவ்வாறு கிரகங்களின் வலிமையை அறிந்து தொழிலை பற்றிக் கூறவேண்டும்.
            சனி வலுப்பெற்றால் அடிமைத் தொழில்.
            சூரியனும்,சிம்மமும், 10ம் பாவமும் வலுப்பெற்றால் அரசு பணிக்கு வாய்புண்டு.



 11ம் பாவம்:

தலைச்சன் குழந்தை:

                   செவ்வாய் மேஷத்துடன், 11ம் பாவ அதிபதியுடன் தொடர்பு பெற்றாலும்,
                 லக்னாதிபதி  11ம் பாவத்தில், 11ம் பாப அதிபதி லக்னத்தில் இருந்தாலும் ஜாதகர் தான் மூத்தவர்.
                    மேற்குறித்த அமைப்பில் 11ம் பாவ அதிபதி வலுவுடன் இருந்தால் மூத்த சகோதரி இருக்கலாம். 

இளைய மனைவி:

                     11ம் பாவ அதிபதி வலுத்து, 7ம் பாவ அதிபதி வலுக்குறைந்து, 2ம் பாவத்தில் பாப கிரகங்கள் அமர்ந்து அதன் அதிபரும் கெட்டு விட்டாலும், 
                     லக்னாதிபதி 11ம் இடத்தில் இருந்து உடன் செவ்வாய், சுக்கிரன் இருந்தாலும், 
                      2ம் பாவத்தில் பாபக்கிரகம் உச்சம் பெற்றாலும்
         
                       இளையதாரம் ஏற்பட வாய்புண்டு.

திடீர் யோகம்:

                      11ம் பாவத்தில் ராகு இருந்து அந்த பாவம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரமாக இருந்து, ராகு கேந்திரத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்துவிட்டால் ராகு திசையில் திடீர் சோகம் ஏற்படும். 

காரகர் - குரு. 



12ம் பாவம்:

1. 11 ம் பாவத்தில் ராகு வுக்கு சொல்லப்பட்ட திடீர் அதிர்ஷ்டம் இங்கும் பொருந்தும். 

2. இங்கு கேது அமர்வது என்பது மோட்ச பிறவி எனப்படும் என்றாலும் குரு நிலை குறித்தும் அறிய வேண்டும்.

3. ராகு சுபர் பார்வை இன்றி இருந்தால் நல்ல தூக்கம் இருக்காது.

4. காரகர் - சனி. 

                  

Tuesday, 27 August 2019

பாடம் 31: கோச்சார பலன்

பாடம் 31:


கோச்சார பலன்:

         ஜாதக பலன் கணிக்க லக்கினம் அவசியம். கோச்சார பலன் கணிக்க ராசி வேண்டும்.


அதாவது பலன்கள்‌ சொல்வதில்‌ இரண்டு முறை இருக்கிறது. பிறக்கும்‌ போது இருக்கும்‌ தசா புத்திகள்‌, கிரக அமைப்புகளை வைத்துச்‌ சொல்வது. மற்றொன்று தற்கால கிரக நிலைகளை வைத்து பலன்‌ கூறுவது.                           

தற்கால கிரக நிலைகளை வைத்துதான்‌ வாரப்பலன்‌, தினப்‌ பலன்‌, வார ராசி,
மாத ராசி, குருப்பெயர்ச்சிப்‌ பலன்களையெல்லாம்‌ கொடுக்கிறோம்‌. தற்கால
கிரக நிலைகளுக்கு வலிமை அதிகம். நல்ல தசா புத்தி நடக்காதவர்களுக்கு
தற்கால கிரக நிலை வலிமையாக வேலை செய்யும்‌. தசா புத்தி பலவீனமாக
இருக்கிறவர்களுக்கு கோச்சார கிரகங்கள்‌, அதாவது தற்போது எங்கெங்கு
நன்றாக இருக்கிறதோ அதுமாதிரி. ஒருத்தருக்கு மோசமான திசை நடக்கிறது
என்று வைத்துக்கொள்வோம்‌. அதாவதுக்குரிய திசை, 8க்குரிய திசை,
பாதகாதிபதி திசை நடந்து அவர்களுக்கு ஏழரைச்‌ சனியும்‌
வந்துவிட்டால்‌ அவருடைய பாடு திண்டாட்டம்தான்‌. அடிமட்டத்திற்குக்‌
கொண்டுபோய்விடும்‌ திண்டாட்டம்தான்‌. அடிமட்டத்திற்குக்‌ கொண்டுபோய்விடும்‌
யோக திசை நடக்கும்‌ போது மோசமான ஏழரைச்‌ சனியெல்லாம்‌ வருகிறதென்றால்‌,
அவர்களை அது காப்பாற்றும்‌. ஏற்பக்கூடிய பாதிப்புகள்‌, அவர்களுக்கு
இல்லாமல்‌ போகும்‌. கோச்சாரப்‌ பலன்களை வைத்துதான்‌ ராசிப்பலன்‌
சொல்கிறோம்‌. ஆனால்‌ அவரவர்கள்‌ பிறந்த நேரத்திற்கு உரிய கிரக
அமைப்புகள்‌ தசா புத்திகளை அடிப்படையாக வைத்து
கோச்சாரப்‌ பலன்களின்‌ எண்ணிக்கை அதிகமாவதோ
குறைவதோ உண்டாகும்‌. அதனால்‌ அவரவர்கள்‌ பிறந்த
ஜாதகம்‌ முக்கியம்‌. அதில்‌ நடக்கும்‌ தசா புத்தியும்‌ முக்கியம்‌.



கோச்சாரம்‌ என்பது அவுட்லைன்‌ மாதிரி. அது
ஒரு ஆழமான விஷயம்‌ கிடையாது. உதாரணத்திற்கு ஒருத்தருடைய 6வது
வீட்டிற்கு சூரியன்‌ வருகிறார்‌. 6ல்‌ சூரியன்‌ வந்தால்‌ திடீர்‌ லாபம்‌,
திடீர்‌ யோகம்‌, அரசாங்கத்தால்‌ பதவி, வழக்குகளில்‌
வெற்றி போன்று உண்டாகும்‌. 3வது வீட்டில்‌ செவ்வாய்‌ உட்கார்ந்தாரென்றால்‌
புதிய முயற்சிகளில்‌ வெற்றி போன்றெல்லாம்‌ உண்டாகும்‌ என்று சொல்கிறோம்‌.
அந்த நேரத்தில்‌ சூரிய திசை, சூரிய புத்தி இருந்ததென்றால்‌ அந்தப்‌ பலன்‌
அப்படியே நடக்கும்‌.சூரியன்‌ சாதகமாக இருந்து சூரிய திசை,
சூரிய புத்தியும்‌ நடந்து கோச்சாரத்திலும்‌ சூரியன்‌ 6வது வீட்டிற்கு வந்தால்‌
அரசாங்கத்தில்‌ பெரிய பதவிகள்‌ கிடைப்பது போன்று
உண்டாகும்‌. - ஆனால்‌, அவருடைய ஜாதகத்தில்‌, சூரியன்‌ பலவீனமாக இருந்து,
சூரியன்‌ கெட்டவராக இருந்தால்‌ நல்ல பலன்கள்‌ கொஞ்சம்‌ குறையும்‌.
அதனால்‌ கோச்சாரப்‌ பலன்களை வைத்து கொடுக்கும்‌
ராசி பலன்களெல்லாம்‌ ஒரு அவுட்‌ லைன்‌ அவ்வளவுதான்‌.
பாடம் 11ல் கிரகங்களின் சஞ்சாரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அத்துடன் கோச்சாரத்தில் கிரகங்கள் நற்பலன்கள் கொடுக்கும்
இடங்களை கீழே படியலிடுகிறேன். நன்கு மனதில் இருத்திக் கொள்ளுங்கள.


சூரியன்:      - ராசியிலிருந்து 3,6,10,11 வீடுகள்
சந்திரன்:      - ராசியிலிருந்து 3,6,7,10,11 வீடுகள்
செவ்வாய்.   - ராசியிலிருந்தது 3,6,10,11 வீடுகள்
புதன்.            - ராசியிலிருந்து 2,4,6,10,11 வீடுகள்
குரு.               - ராசியிலிருந்து 2,5,7,9,11 வீடுகள்
சுக்கிரன்.     - ராசியிலிருந்து 1,2,3,4,5,9,11 வீடுகள்
சனி.               - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்
ராகு.              - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்
கேது.             - ராசியிலிருந்து 3,6,11 வீடுகள்

சனியின் கோச்சார பலன்கள்:

ராசிக்கு 12ல்‌ சனி வரும்‌ போது 71/2 நாட்டுச்‌ சனி ஆரம்பமாகி
12ம்‌ இடம்‌ ராசி, 2ம்‌ இடம்‌ ஆகிய மூன்று ஸ்தானங்களிலும்‌
71/2 வருடங்கள்‌ சஞ்சரிக்கும்‌ அந்தக்‌ காலம்‌ நல்ல தசாபுத்திகள்‌
நடந்தால்‌ ஒழிய நல்ல பலன்‌ களைப்‌ பார்ப்பது
அரிது. பல துன்பங்களையும்‌, துயரங்‌களையும்‌ அளித்தே
தீரும்‌. அச்சமயம்‌ சனி பகவான்‌ ப்ரீதி செய்வது நல்லது. அவர்‌
ஸ்தலமாகிய திருநள்ளாறுக்கு சென்று பகவான்‌ ப்ரீதி செய்வது
நல்லது. அவர்‌ ஸ்தலமாகிய திருநள்ளாறுக்கு சென்று வரவேண்டும்‌.
ராசிக்கு 4ம்‌ இடத்தில்‌ சனி வரும்‌ போது அர்த்தாஷ்டமச்‌ சனி
என்று பெயர்‌. 7ம்‌ இடத்தில்‌ சனி வரும் போது கண்டச்‌ சனி என்று பெயர்.
8ம் இடத்தில்‌ வரும் போது அஷ்டமச்‌ சனி என்று பெயர். இது காலங்களில் சனியின்
கொடுமை அதிகமாகவே இருக்கும்‌.ஆனால் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,
கன்னி,துலாம்,மகரம் ராசிகளுக்கு அதிக கெடு பலன்களைச் செய்யாது.

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...