பாடம் 36:
ஜாதகமும், திருமணப் பொருத்தமும்:
திருமணங்களுக்கு நட்சத்திரப் பொருத்தம் பார்பது தற்போது நடைமுறை. இதற்காக நிறைய புத்தகங்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றின் மூலம் பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் எத்தனை பொருத்தங்கள் உண்டு, பொருத்தம் உண்டா இல்லையா என்பதனை உடனே அறிந்துகொள்ளலாம்.
ஆனால் தெளிவான முறையில் பார்க்க வேண்டும் என்றால் இருவரின் ஜாதகங்களையும் ஆய்வு செய்யவேண்டும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் தோல்வியில் முடிவடைவதற்கு முக்கிய காரணம் கருத்து வேற்றுமையே. அதனால்தான் இருவரின் ஜாதகத்தையும் நன்கு ஆய்வு செய்து பொருத்தமான ஜாதகங்களை மட்டுமே இணைக்கவேண்டும். அதைப்பற்றி கீழே விளக்குகிறேன்.
ஜாதகத்தில் திரிகோண அதிபதிகள் (1,5,9ம் வீடுகள்) அதிநட்பாக வருவர். எனவே லக்னம், ராசி திரிகோணங்களில் வரும் ஜாதகங்களையே இணைக்கவேண்டும்.
உதாரணமாக ஆணின் லக்னம் மேஷம் என்றால் பெண்ணின் லக்னம் மேஷம், சிம்மம், தனுசு இவற்றில் ஒன்றாக இருக்கவேண்டும். இதேபோல் ஆணின் ராசி மிதுனம் என்றால் பெண்ணின் ராசி மிதுனம், துலாம், கும்பம் இவற்றில் ஒன்றாக இருக்கவேண்டும். இதேபோல் பெண் லக்னம், ராசிக்கும் பார்கவேண்டும். இவ்வாறு இணைக்கும்போது அவர்களின் குணநலன்கள் பொருத்தமாகவும், நட்புடனும் இருக்கும். எனவே நட்புக்கிரகங்களின் அடிப்படையில் இணைப்பதைவிட திரிகோண அமைப்பே சிறந்தது.
அடுத்து இருவரின் 2ம்,7ம் வீடுகள் மற்றும் அதிபதிகள் நல்ல நிலையில் இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். 2ம் இடம் என்பது 7ம் இடத்திற்கு 8ம் இடம். அதாவது தனக்கு வரும் கணவன் மற்றும் மனைவியின் ஆயுளைப்பற்றி அறிய பயன்படும் இடம். குறிப்பாக பெண்களுக்கு 8ம் வீடு நன்றாக இருக்கிறதா என பார்க்கவேண்டும். ஏனெனில் 8ம் இடம் 7ம் இடத்திற்கு இரண்டாமிடம். அதாவது கணவனால் வரும் குடும்ப வாழ்க்கைபற்றி அறிய பயன்படும் இடம்.
அடுத்து இருவரின் ஆயுள் பலம், வரும் தசைகள், போக அமைப்பு, போன்றவற்றை கவனமாக ஆய்வு செய்யவேண்டும்.
மேலும் 11ம்இட அதிபதி வலிமை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் அது இளைய தாரம் பற்றி குறிப்பிடுவது.
மேலும் இருவருக்கும் செவ்வாய் தோஷம் முழுமையாக உள்ளதா இல்லை பரிகார செவ்வாய் தோஷமா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் செவ்வாய் தோஷம் முழுமையான ஜாதகத்தை முழுமையான ஜாதகத்துடனும், பரிகார செவ்வாய் தோஷம் உள்ளதை அவ்வாறே பரிகார தோஷத்துடன் இணைக்கவேண்டும். செவ்வாய் தோஷம் பற்றி கீழே விரிவாக விளக்குகிறேன்.
இவ்வாறு இரு ஜாதகங்களையும் ஆய்வு செய்து பொருத்தமானவற்றை மட்டும் இணைத்தால் சிறப்பு.
மேலும் இருவருக்கும் செவ்வாய் தோஷம் முழுமையாக உள்ளதா இல்லை பரிகார செவ்வாய் தோஷமா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் செவ்வாய் தோஷம் முழுமையான ஜாதகத்தை முழுமையான ஜாதகத்துடனும், பரிகார செவ்வாய் தோஷம் உள்ளதை அவ்வாறே பரிகார தோஷத்துடன் இணைக்கவேண்டும். செவ்வாய் தோஷம் பற்றி கீழே விரிவாக விளக்குகிறேன்.
இவ்வாறு இரு ஜாதகங்களையும் ஆய்வு செய்து பொருத்தமானவற்றை மட்டும் இணைத்தால் சிறப்பு.
செவ்வாய் தோஷம்:
செவ்வாய் தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12ம் இடங்களில் இருப்பது. இது முழுமையான செவ்வாய்தோஷமாகும். இவ்வாறு இருக்கும் செவ்வாயுடன் பாபக்கிரகங்கள் இணைந்தால், பார்த்தால், மற்றும் குரு பார்வை பெற்றால் செவ்வாய் தோஷம் பாதியாக குறைந்துவிடும். இதுவே பரிகார செவ்வாய் தோஷம். மேலும் செவ்வாய் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகியவற்றில் இருந்தாலும் அது பரிகார செவ்வாய் எனப்படும்.
No comments:
Post a Comment