சோதிட பாடம் எளிய முறையில், Online jothidam learning in Tamil,அடிப்படை முதல் சோதிடம் முழுமையாக கற்க.
Saturday, 13 July 2019
Wednesday, 10 July 2019
பாடம் 12: பாதகாதிபதி, மாரகாதிபதி:
ஒருவர் ஜாதகத்தில் மாரகம்(மரணம்) செய்வதற்கும், பாதகமான நிலைகளை செய்வதற்கும் ஆன சில அமைப்புக்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய விரங்களைக் காண்போம்.
சர,ஸ்திர,உபய ராசிகள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். அவற்றின் அடிப்படையில் இந்த மாரக,பாதக அமைப்புகள் தரப்பட்டுள்ளன.
சரம் ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகியவற்றை லக்கினங்களாக கொண்டு பிறந்த சாதகர்களுக்கு 2ம் வீடும், 7ம்வீடும் மாரகஸ்தானங்கள்.அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள். 11ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி்.
உதாரணமாக, மேஷம் லக்கினமாக கொண்ட சாதகருக்கு 2ம் வீடான ரிஷபமும், 7ம் வீடான துலாமும் மாரகஸ்தானங்கள். அவற்றின் அதிபதிகளான சுக்கிரனே மாரகாதிபதி.(இங்கு சுக்கிரனே ரிஷபத்திற்கும், துலாத்திற்கும் அதிபதி). 11ம் வீடான கும்பம் பாதகஸ்தானம். அதன் அதிபதி சனியே பாதகாதிபதி. இப்படியே மற்ற சர ராசிகளான லக்கினங்களுக்கும் கணித்துக்கொள்ளலாம்.
ஸ்திர ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம், ஆகியவற்றை லக்கினங்களாக கொண்டு பிறந்த சாதகர்களுக்கு 3ம் வீடும்,8ம் வீடும் மாரகஸ்தானங்கள். அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள். 9ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி.
உதாரணமாக ரிஷபத்தை லக்கினமாக கொண்டு பிறந்த சாதகருக்கு 3ம் வீடான கடகமும்,8ம் வீடான தனுசும் மாரகஸ்தானங்கள். அவற்றின் அதிபதிகளான சந்திரனும், குருவும் மாரகாதிபதிகள். 9ம் வீடான மகரம் பாதகஸ்தானம். அதன் அதிபதி சனி பாதகாதிபதி. இப்படியே மற்ற ஸ்திர ராசிகளுக்கும்.
உபய ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகியவற்றை லக்கினங்களாக கொண்டு பிறந்த சாதகர்களுக்கு 7ம் வீடும்,11ம் வீடும் மாரகஸ்தானங்கள். அவற்றின் அதிபதிகள் மாரகாதிபதிகள். 7ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி. உபய லக்கினத்திற்கு மட்டும் தான் 7ம் வீடு மாரக, பாதக ஸ்தானமாக வரும்.
உதாரணமாக மிதுன லக்கனத்தில் பிறந்த சாதகருக்கு 7ம் வீடான தனுசும், 11ம் வீடான மேஷமும் மாரகஸ்தானங்கள. அவற்றின் அதிபதிகளான குருவும், செவ்வாயும் மாரகாதிபதிகள். 7ம் வீடான தனுசு பாதகஸ்தானம். அதன் அதிபதியான குரு பாதகாதிபதி. இப்படியே மற்ற உபய ராசிகளுக்கும்.
Tuesday, 9 July 2019
பாடம் 11: கிரகங்கள் ஒவ்வொரு ராசி(வீடு)களிலும் சஞ்சரிக்கும் காலம்:
ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசி வீட்டில் சில காலம் தங்கியிருந்து பின் அடுத்த ராசி வீட்டிற்கு இடம் பெயரும். இதைத்தான் அடிக்கடி பேப்பர்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி என்று படிக்கின்றோம். ஆனால் மற்றகிரகங்களைப்பற்றி வருவதில்லை. அதற்கான காரணம் மற்ற கிரகங்களை விட மேற்குறித்த கிரகங்கள் ஒரு ராசியில் ஒரு ஆண்டிற்கு மேலாக தங்கி பலன் தருகின்றன.
சூரியன் ------- 1 மாதம்
சந்திரன்--------21/4 நாள்
செவ்வாய்------11/2 மாதம்
புதன்-------------- 1 மாதம்
குரு ----------------- 1 வருடம்
சுக்கிரன் --------- 1 மாதம்
சனி ----------------- 21/2 வருடம்
ராகு ----------------- 11/2 வருடம்
கேது ----------------- 11/2 வருடம்
கிரகங்களின் சுபர், பாபர் தன்மை:
இயற்கையாகவே கிரகங்களுக்கான சுப,பாவதன்மைகள் சோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சுபக் கிரகங்கள்------- குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன்,
தனித்த புதன்
பாவ கிரகங்கள்-------- சனி, சூரியன், செவ்வாய், ராகு, கேது,
தேய்பிறை சந்திரன்
Monday, 8 July 2019
பாடம் 10: கிரகங்களின் பார்வை:
அனைத்துக் கிரகங்களும் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7வது வீட்டைப் பார்க்கும். இது தவிர சில கிரகங்களுக்கு சிரப்புப் பார்வைகளும் உண்டு. அவற்றைப் பற்றி காண்போம்.
சூரியன்---------7ம் பார்வை மட்டும்
சந்திரன்---------7ம் பார்வை மட்டும்
செவ்வாய்------4ம் வீடு,7ம் வீடு,8ம் வீட்டுப் பார்வைகள்
புதன்--------------7ம் பார்வை மட்டும்
குரு----------------5ம் வீடு,7ம் வீடு,9ம் வீட்டுப் பார்வைகள்
சுக்கிரன்--------7ம் பார்வை மட்டும்
சனி----------------3ம் வீடு,7ம் வீடு,10ம் வீட்டுப் பார்வைகள்
ராகு----------------3ம் வீடு,7ம் வீடு,11ம் வீட்டுப் பார்வைகள்
கேது---------------3ம் வீடு,7ம் வீடு,11ம் வீட்டுப் பார்வைகள்
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சூரியன் முதல் சனி வரையிலான கிரகங்கள் நேர் பார்வையிலும்(clockwise direction), ராகு, கேதுக்கள் எதிர் பார்வையிலும்(anticlockwise direction) பார்க்கும்.
Friday, 5 July 2019
பாடம் 9:
லக்னம்,ஜென்ன ராசி,ஜென்ன நட்சத்திரம்:
லக்னம் என்பது குழந்தை பிறக்கின்றபோது எந்த ராசி நடந்து கொண்டிருக்கிறதோ, அதுவே ஆகும். அதனை ஜாதகத்தில் 'ல' என்று குறிப்பிட்டு இருப்பர்.
ஜென்ன ராசி என்பது குழந்தை பிறக்கின்றபோது சந்திரன் எந்த ராசியில் இருக்கின்றாரோ, அதுவே ஆகும்.
ஜென்ன நட்சத்திரம் என்பது குழந்தை பிறக்கும்போது எந்த நட்சத்திரம் இருக்கின்றதோ,அதுவே ஆகும்.
இந்த விவரங்களை பஞ்சாங்கம் மூலம் கணிக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சோதிட சாப்வேர்கள் இலவசமாக நிறையக் கிடைக்கின்றன. அவற்றை பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொண்டால்போதும். ஜாதகத்தின் A to Z கிடைத்துவிடும். பலன் மட்டும் கணிக்கத் தெரிந்தால் போதும்.
எனவே நான் கொடுக்கும் பதிவுகளை நன்கு படித்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள். பலன் சொல்வதற்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் சொன்ன பிறகு சாப்வேர் பயன்படுத்தும் முறையையும் விளக்குகிறேன்.
இந்த விவரங்களை பஞ்சாங்கம் மூலம் கணிக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சோதிட சாப்வேர்கள் இலவசமாக நிறையக் கிடைக்கின்றன. அவற்றை பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொண்டால்போதும். ஜாதகத்தின் A to Z கிடைத்துவிடும். பலன் மட்டும் கணிக்கத் தெரிந்தால் போதும்.
எனவே நான் கொடுக்கும் பதிவுகளை நன்கு படித்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள். பலன் சொல்வதற்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் சொன்ன பிறகு சாப்வேர் பயன்படுத்தும் முறையையும் விளக்குகிறேன்.
ஜாதக கட்டமும், கிரகங்களின் சஞ்சாரமும்:
ஜாதகட்டங்கள் 12. இதில் 'ல' என்பது லக்னம். இது முதல் வீடாக எடுத்துக்கொள்ளப்படும். கடிகார சுற்றுப்படி வரிசையாக அடுத்தடுத்த கட்டங்கள் முறையே 2வது வீடு, 3வது வீடு ,4வது வீடு, 5வது வீடு, 6வது வீடு, 7வது வீடு, 8வது வீடு, 9வது வீடு, 10வது வீடு, 11வது வீடு, 12வது வீடு என கொள்ளப்படும்.
இந்த 12 வீடுகளில்தான் நம் வாழ்வின் அனைத்து விஷயங்களும் காரகத்துவங்களாக பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும்.
இந்த வீடுகளின் வழியாகத்தான் 9 கிரகங்களும் சஞ்சாரம் செய்யும். ராகு,கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் கடிகாரச் சுற்றாகவும், ராகு,கேதுக்கள் எதிராகவும் (anti clockwise) சஞ்சாரம் செய்யும்.
உதாரணமாக லக்கினம் கடகம் என்று எடுத்துக் கொண்டால், கடகம் 1வது வீடாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வீடுகள் கீழ்கண்டவாறு அமையும்.
உதாரணமாக லக்கினம் கடகம் என்று எடுத்துக் கொண்டால், கடகம் 1வது வீடாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வீடுகள் கீழ்கண்டவாறு அமையும்.
Subscribe to:
Posts (Atom)
பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந எனது 36 பாடங்களையும் நன்றாகப் படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...
-
பாடம் 12: பாதகாதிபதி, மாரகாதிபதி: ஒருவர் ஜாதகத்தில் மாரகம்(மரணம்) செய்வதற்கும், பாதகமான நிலைகளை செய்வதற்கும் ஆன சில அமை...
-
பாடம் 20: 4. நவாம்சம்: நவாம்சம் என்பது ராசிக்கட்டத்தைப் போன்றதே. எனவே ராசி கட்டமும் அந்த 12 கட்டங்களில் அடை...
-
பாடம் 31: கோச்சார பலன்: ஜாதக பலன் கணிக்க லக்கினம் அவசியம். கோச்சார பலன் கணிக்க ராசி வேண்டும். அதாவது பலன...





























