Friday, 5 July 2019

பாடம் 9: 

லக்னம்,ஜென்ன ராசி,ஜென்ன நட்சத்திரம்:


        லக்னம் என்பது குழந்தை பிறக்கின்றபோது எந்த ராசி நடந்து கொண்டிருக்கிறதோ, அதுவே ஆகும். அதனை ஜாதகத்தில் 'ல' என்று குறிப்பிட்டு இருப்பர்.

        ஜென்ன ராசி என்பது குழந்தை பிறக்கின்றபோது சந்திரன் எந்த ராசியில் இருக்கின்றாரோ, அதுவே ஆகும்.

        ஜென்ன நட்சத்திரம் என்பது குழந்தை பிறக்கும்போது எந்த நட்சத்திரம் இருக்கின்றதோ,அதுவே ஆகும்.

        இந்த விவரங்களை பஞ்சாங்கம் மூலம் கணிக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சோதிட சாப்வேர்கள் இலவசமாக நிறையக் கிடைக்கின்றன. அவற்றை பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொண்டால்போதும். ஜாதகத்தின் A to Z கிடைத்துவிடும். பலன் மட்டும் கணிக்கத் தெரிந்தால் போதும்.

        எனவே நான் கொடுக்கும் பதிவுகளை நன்கு படித்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள். பலன் சொல்வதற்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் சொன்ன பிறகு சாப்வேர் பயன்படுத்தும் முறையையும் விளக்குகிறேன்.


ஜாதக கட்டமும், கிரகங்களின் சஞ்சாரமும்:


         ஜாதகட்டங்கள் 12. இதில் 'ல' என்பது லக்னம். இது முதல் வீடாக எடுத்துக்கொள்ளப்படும். கடிகார சுற்றுப்படி வரிசையாக அடுத்தடுத்த கட்டங்கள் முறையே 2வது வீடு, 3வது வீடு ,4வது வீடு, 5வது வீடு, 6வது வீடு, 7வது வீடு, 8வது வீடு, 9வது வீடு, 10வது வீடு, 11வது வீடு, 12வது வீடு என கொள்ளப்படும்.    
          இந்த 12 வீடுகளில்தான் நம் வாழ்வின் அனைத்து விஷயங்களும் காரகத்துவங்களாக பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும்.
           இந்த வீடுகளின் வழியாகத்தான் 9 கிரகங்களும் சஞ்சாரம் செய்யும். ராகு,கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் கடிகாரச் சுற்றாகவும், ராகு,கேதுக்கள் எதிராகவும் (anti clockwise) சஞ்சாரம் செய்யும்.

          உதாரணமாக லக்கினம் கடகம் என்று எடுத்துக் கொண்டால், கடகம் 1வது வீடாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வீடுகள் கீழ்கண்டவாறு அமையும்.






          
           




  

1 comment:

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...