Thursday 18 July 2019

பாடம் 20: 4. நவாம்சம்:

                             நவாம்சம் என்பது ராசிக்கட்டத்தைப் போன்றதே. எனவே ராசி கட்டமும் அந்த 12 கட்டங்களில் அடைக்கப்பட்ட நட்சத்திரங்களையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள். 
                            ராசி கட்டத்தில் கேது முதல் புதன் வரையிலான நட்சத்திரங்கள் வரிசையாக ஒரு கட்டத்தில் நட்சத்திரங்களின் 9 பாகங்கள் வருமாறு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சில நட்சத்திரங்கள் முழுமையாகவும், சில பாகங்களாகப் பிரிக்கப்பட்டும் 9 பாகங்கள் என்ற  கணக்கில் தரப்பட்டிருக்கும்.
                            ஆனால் நவாம்சத்தில் எல்லா நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியிலும் 9 பாகங்களாகவே நிரப்பட்டிருக்கும். அத்துடன் கேது முதல் புதன் வரையிலான நட்சத்திரங்கள் ராசி மாதிரி வரிசையில்லாமல், கேதுவிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்,சுக்கிரனிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்,சூரியனிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்  எடுத்துக் கொள்ளப்பட்டு  அவற்றின் நட்சத்திரங்களால் நிரப்பப்படும். விரிவான விளக்கத்தை கீழே தரப்பட்டுள்ள கட்டங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.



          இரண்டாவது படத்தில் தரப்பட்டுள்ள 9 நட்சத்திரங்களின் 1 வது பாகங்கள் அனைத்தும் மேஷத்திலும், 2 வது பாகங்கள் அனைத்தும் ரிஷபத்திலும், 3 வது பாகங்கள் அனைத்தும் மிதுனத்திலும், 4 வது பாகங்கள் அனைத்தும் கடகத்திலும் நிரப்பப்படும். இதுபோல்தான் 3 வது, 4 வது படங்களிலும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு 12 ராசி கட்டங்களிலும் நட்சத்திரங்கள் நிரப்பப்படும். இதைத்தான் 1 வது படத்தில் சுருக்கமாக விளக்கி உள்ளேன்.

           அடுத்தாக நவாம்சம் பயன் குறித்துப் பாரப்போம்.
           
            ஒரு ஜாதகம் கணிப்பதற்கு ராசியும், நவாம்சமும் அவசியம். ஏனென்றால் ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை நவாம்சம் தெளிவாக்க் காட்டிவிடும்.
             உதாரணமாக ஒரு ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று ராசி கட்டத்தில் மேஷத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்தம் 3வது பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதே செவ்வாய் நவாம்சத்தில் நட்சத்திர பாகத்தின் அடிப்படையில் மிதுன ராசியை அடையும். அங்கு செவ்வாய் பகை பெற்று வலுக்குறையும்.  எனவே பலன் சொல்லும் பொழுது செவ்வாய் வலு அற்றதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை  துல்லியமாக அறிய நவாம்சம் பயன்படும்.

               மேலும் ராசியிலும் , நவாம்சத்திலும் ஒரே ராசியில் ஒரு கிரகம் இருந்தால் அதற்கு வர்கோத்தம் என்று பெயர். வர்கோத்தம் பெற்ற கிரகங்கள் ஆட்சி வலுவைப் பெரும் என்பது சோதிட விதி்.

        உதாரணமாக செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்று மேஷத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்தம் 1 வது பாகத்தில் இருப்பதாக எடுத்துக் கொண்டால் அது நவாம்சத்தில் மேஷத்திலேயே ஆட்சி வலுவுடன் இருக்கும்.

          நவாம்சம் என்பது சுருக்கமாக அம்சம் என்று அழைக்கப்படும்.


1 comment:

  1. நவாம்சம் போடவும் நிராயன ஸ்புடம் போடவும் எப்படி. எந்த புத்தகங்களை படிக்கவேண்டும்

    ReplyDelete

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...