பாடம் 19: 2. கிரகங்களின் பரிவர்த்தனை:
கிரகங்களின் பரிவர்த்தனை என்பது கிரகங்கள் தங்களின் வீடுகளில் மாறி அமர்வது. ஏற்கனவே ஒவ்வொரு கிரகத்துக்குமான வீடுகள் குறிப்பிட்டிருக்கிறேன். அதன்படி கிரகங்கள் அமர்ந்தால் நேரடியாக வலிமை பெரும். அவ்வாறல்லாமல் இரு கிரகங்கள் ஒருவர் வீட்டில் மற்றொருவர் அமரும்போது அது ஒருவர்கொருவர் பகை வீடாக இருந்தால் அந்த இரு கிரகங்களும் வலிமை இழந்ததாக தெரியும். ஆனால் சோதிட சாஸ்திரப்படி அவைகள் பரிவர்தனை அமைப்பின்படி தங்களது வீடுகளுக்கே திரும்பியதாக கொள்ளப்படுகிறது. எனவே அக்கிரகங்கள் தங்களின் ஆட்சி வீட்டுப் பலத்தையே பெரும்.
உதாரணமாக மேஷத்தில் புதனும், கன்னியில் செவ்வாயும் அமர்ந்து பகை பெற்றிருந்தாலும் இருவரும் பரிவர்தனை என்ற அமைப்பில் மேஷத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதாகவும், கன்னியில் புதன் அமர்ந்திருப்பதாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.
3. கிரகங்களின் பாதசாரம்:
கிரகங்களின் பாதசாரம் என்பது கிரகங்கள் ஜாதகத்தில் நட்சத்திரங்களின் பாகங்களின் அமரந்திருப்பது. ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தபடி ஒவ்வொரு ராசிகட்டத்திலும் நட்சத்திரங்களின் 9 பாகங்கள் உள்ளன. எனவே கிரகங்கள் ராசி கட்டங்களில் அமரும்போது ஏதாவது நட்சத்திரத்தின் பாகத்தில்தான் அமரமுடியும். இதுவே கிரகத்தின் பாதசாரம் என அறியப்படும்.
இதன் அடிப்படையில் கிரகங்களின் வலிமை அறியப்படும். ஏற்கனவே ஒவ்வொரு கிரகத்திற்குமான நட்சத்திரங்களும், நட்பு,பகை,சம கிரகங்களும் குறிப்பிட்டிருக்கின்றேன். அவற்றை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.
ஒரு கிரகம் தன் சொந்த நட்சத்திர, நட்பு நட்சத்திர பாதம் பெற்றால் வலிமை உடையதாகவும், சம நட்சத்திர பாதம் பெரும்போது சற்று குறைவான வலிமையையும், பகை நட்சத்திரம் பெரும்போது வலிமை இழந்த நிலையிலும் இருக்கும்.
No comments:
Post a Comment