Wednesday, 31 July 2019

பாடம் 24: 8. அஸ்தங்க தோஷம்:


அஸ்தங்க தோஷம் ராகு, கேதுகளுக்கு இல்லை.


Tuesday, 30 July 2019

பாடம் 23: 7. கேந்திராதிபத்திய தோஷம்:


உதாரணமாக மேஷ லக்னம் என்று எடுத்துக்கொள்வோம். 1ம் வீட்டு அதிபதி அதாவது லக்ன அதிபதி செவ்வாய், 4 ம் வீடான கடகத்திலோ, 7 ம் வீடான துலாத்திலோ, 10 ம் வீடான மகரத்திலோ அமர்ந்தால் தான் அது கேந்திராதிபத்திய தோஷம் எனப்படும். அதேபோல் 4ம் வீடான  கடகத்தின்  அதிபதி சந்திரன், 1வது வீடான மேஷத்திலோ, 4 ம் வீடான கடகத்திலோ,7ம் வீடான துலாத்திலோ, 10ம் வீடான  மகரத்திலோ அமர்ந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம்.





Sunday, 28 July 2019

பாடம் 22: 6.நீசபங்கம், ராஜயோகம்:

                                         
கிரகங்களின் உச்சம்,நீசம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுருக்கிறேன். படத்தை பார்த்தால் நினைவுக்கு வரும். உச்சம் பெரும் கிரகம் தான் இருக்கும் வீட்டிற்கு 7வது வீட்டில் அதாவது நேர் எதிரில் நீச்சமாகும் என்பது சோதிட விதி. அவ்வாறு நீசமாகும் கிரகம் தனது வலிமையை இழந்துவிடும். நீசம் பெற்ற கிரகம் நீசபங்கம் அதாவது வலிமை பெறுவதற்கான அமைப்புகள் மற்றும் நீசம் நீங்கி ராஜயோகம் தரும் அமைப்புகள் சிலவற்றை சோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அவற்றைபற்றி கீழே பார்ப்போம்.



Friday, 19 July 2019

பாடம் 21: 5. வக்ரம்:

                 
                   

        


Thursday, 18 July 2019

பாடம் 20: 4. நவாம்சம்:

                             நவாம்சம் என்பது ராசிக்கட்டத்தைப் போன்றதே. எனவே ராசி கட்டமும் அந்த 12 கட்டங்களில் அடைக்கப்பட்ட நட்சத்திரங்களையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள். 
                            ராசி கட்டத்தில் கேது முதல் புதன் வரையிலான நட்சத்திரங்கள் வரிசையாக ஒரு கட்டத்தில் நட்சத்திரங்களின் 9 பாகங்கள் வருமாறு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சில நட்சத்திரங்கள் முழுமையாகவும், சில பாகங்களாகப் பிரிக்கப்பட்டும் 9 பாகங்கள் என்ற  கணக்கில் தரப்பட்டிருக்கும்.
                            ஆனால் நவாம்சத்தில் எல்லா நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியிலும் 9 பாகங்களாகவே நிரப்பட்டிருக்கும். அத்துடன் கேது முதல் புதன் வரையிலான நட்சத்திரங்கள் ராசி மாதிரி வரிசையில்லாமல், கேதுவிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்,சுக்கிரனிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்,சூரியனிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்  எடுத்துக் கொள்ளப்பட்டு  அவற்றின் நட்சத்திரங்களால் நிரப்பப்படும். விரிவான விளக்கத்தை கீழே தரப்பட்டுள்ள கட்டங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.



          இரண்டாவது படத்தில் தரப்பட்டுள்ள 9 நட்சத்திரங்களின் 1 வது பாகங்கள் அனைத்தும் மேஷத்திலும், 2 வது பாகங்கள் அனைத்தும் ரிஷபத்திலும், 3 வது பாகங்கள் அனைத்தும் மிதுனத்திலும், 4 வது பாகங்கள் அனைத்தும் கடகத்திலும் நிரப்பப்படும். இதுபோல்தான் 3 வது, 4 வது படங்களிலும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு 12 ராசி கட்டங்களிலும் நட்சத்திரங்கள் நிரப்பப்படும். இதைத்தான் 1 வது படத்தில் சுருக்கமாக விளக்கி உள்ளேன்.

           அடுத்தாக நவாம்சம் பயன் குறித்துப் பாரப்போம்.
           
            ஒரு ஜாதகம் கணிப்பதற்கு ராசியும், நவாம்சமும் அவசியம். ஏனென்றால் ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை நவாம்சம் தெளிவாக்க் காட்டிவிடும்.
             உதாரணமாக ஒரு ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று ராசி கட்டத்தில் மேஷத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்தம் 3வது பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதே செவ்வாய் நவாம்சத்தில் நட்சத்திர பாகத்தின் அடிப்படையில் மிதுன ராசியை அடையும். அங்கு செவ்வாய் பகை பெற்று வலுக்குறையும்.  எனவே பலன் சொல்லும் பொழுது செவ்வாய் வலு அற்றதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை  துல்லியமாக அறிய நவாம்சம் பயன்படும்.

               மேலும் ராசியிலும் , நவாம்சத்திலும் ஒரே ராசியில் ஒரு கிரகம் இருந்தால் அதற்கு வர்கோத்தம் என்று பெயர். வர்கோத்தம் பெற்ற கிரகங்கள் ஆட்சி வலுவைப் பெரும் என்பது சோதிட விதி்.

        உதாரணமாக செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்று மேஷத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்தம் 1 வது பாகத்தில் இருப்பதாக எடுத்துக் கொண்டால் அது நவாம்சத்தில் மேஷத்திலேயே ஆட்சி வலுவுடன் இருக்கும்.

          நவாம்சம் என்பது சுருக்கமாக அம்சம் என்று அழைக்கப்படும்.


பாடம் 19: 2. கிரகங்களின் பரிவர்த்தனை:

                கிரகங்களின் பரிவர்த்தனை என்பது கிரகங்கள் தங்களின் வீடுகளில் மாறி அமர்வது. ஏற்கனவே ஒவ்வொரு கிரகத்துக்குமான வீடுகள் குறிப்பிட்டிருக்கிறேன். அதன்படி கிரகங்கள் அமர்ந்தால் நேரடியாக வலிமை பெரும். அவ்வாறல்லாமல் இரு கிரகங்கள் ஒருவர் வீட்டில் மற்றொருவர் அமரும்போது அது ஒருவர்கொருவர் பகை வீடாக இருந்தால் அந்த இரு கிரகங்களும் வலிமை இழந்ததாக தெரியும். ஆனால் சோதிட சாஸ்திரப்படி அவைகள் பரிவர்தனை அமைப்பின்படி தங்களது வீடுகளுக்கே திரும்பியதாக கொள்ளப்படுகிறது. எனவே அக்கிரகங்கள் தங்களின் ஆட்சி வீட்டுப் பலத்தையே பெரும்.
                 உதாரணமாக மேஷத்தில் புதனும், கன்னியில் செவ்வாயும் அமர்ந்து பகை பெற்றிருந்தாலும் இருவரும் பரிவர்தனை என்ற அமைப்பில் மேஷத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதாகவும், கன்னியில் புதன் அமர்ந்திருப்பதாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.


3. கிரகங்களின் பாதசாரம்:

                  கிரகங்களின் பாதசாரம் என்பது கிரகங்கள் ஜாதகத்தில் நட்சத்திரங்களின் பாகங்களின் அமரந்திருப்பது.  ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தபடி ஒவ்வொரு ராசிகட்டத்திலும் நட்சத்திரங்களின் 9 பாகங்கள் உள்ளன. எனவே கிரகங்கள் ராசி கட்டங்களில் அமரும்போது ஏதாவது நட்சத்திரத்தின் பாகத்தில்தான் அமரமுடியும். இதுவே கிரகத்தின் பாதசாரம் என அறியப்படும்.
                   இதன் அடிப்படையில் கிரகங்களின் வலிமை அறியப்படும். ஏற்கனவே ஒவ்வொரு கிரகத்திற்குமான நட்சத்திரங்களும், நட்பு,பகை,சம கிரகங்களும் குறிப்பிட்டிருக்கின்றேன். அவற்றை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.  
                   ஒரு கிரகம் தன் சொந்த நட்சத்திர, நட்பு நட்சத்திர பாதம் பெற்றால் வலிமை உடையதாகவும், சம நட்சத்திர பாதம் பெரும்போது சற்று குறைவான வலிமையையும், பகை நட்சத்திரம் பெரும்போது வலிமை இழந்த நிலையிலும் இருக்கும்.
                    

Wednesday, 17 July 2019

Tuesday, 16 July 2019

பாடம் 17: ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை அறிதல்:

                 இது ஜாதகத்தின் முக்கியமான கட்டம். அதாவது ஒரு ஜாதகத்தில் எந்த எந்த கிரகங்கள் வலுக்கின்றதோ அதன் திசைகளில் அவற்றின் காரகத்தை, ஆதிபத்தியத்தை சிறப்பாக செயல்படுத்தும். எனவே கிரகங்களின் வலிமையைக் கணக்கிட்டால்தான் ஜாதக பலன்களைத் தெளிவாக கூறமுடியும். எனவே கிரகங்களின் வலிமையை அறிவதற்கு சோதிட சாஸ்திரங்கள் கூறிய பல வழிமுறைகளை தொகுத்து கீழே பட்டயலிட்டு பின் ஒவ்வொன்றையம் விளக்குகிறேன். நன்கு படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இவற்றை நன்கு பரிந்து கொள்வதற்கு இதற்கு முன் நான் இதுவரை சொல்லிவந்த ஜாதக குறிப்புகள் அனைத்தும் படித்து நினைவில் வைத்திருக்க வேண்டும்.

1. ஷட்பலம்

2. கிரகங்களின் பரிவர்தனை

3. கிரகங்களின் பாதசாரம்(நட்சத்திர பாதம்)

4. நவாம்சம்

5.  வக்ரம்

6. நீசபங்கம், ராஐயோகம்

7. கேந்திராதிபத்திய தோஷம்

8. அஸ்தங்க தோஷம்

9. காரகோபாவநாஸ்தி






Sunday, 14 July 2019

பாடம் 16: கிரகங்களின் நோய் காரகத்துவங்கள்:

              ஒவ்வொரு கிரகங்கத்தினாலும் ஏற்படும் நோய் பற்றிய விவரங்களை கீழ்கண்ட அட்டவணையில் காண்போம்.






Saturday, 13 July 2019

பாடம் 15: கிரகங்களின் தொழில் காரகத்துவம்:


        ஒவ்வொரு கிரகத்திற்கும் சில தொழில்கள் வரையறுக்கபட்டுள்ளன. அவைகள் குறித்து கீழே காண்போம்.




      

Friday, 12 July 2019

பாடம் 14: கிரகங்களின் காரகத்துவம்:

                 பாவங்களின் காரகத்தைப்போல் ஒவ்வொரு கிரகத்துக்கும் தனித்தனியே காரகத்தன்மைகள் உண்டு. அவற்றை இன்று காண்போம்.





Thursday, 11 July 2019

பாடம் 13: வீடு அல்லது பாவம் காரகத்துவம்:

            ஏற்கனவே 12 வீடுகள் பற்றி பார்த்தோம். அவற்றை பாவம் அல்லது பாவகம் என்றும் ஜாதகத்தில் குறிப்பிடுவர்.

            இந்த பதிவில் ஒவ்வொரு பாவமும் மனித வாழ்வின் எந்த நிலையைப் பற்றி குறிப்பிடுகின்றது என்பதைப் பார்ப்போம். இது தான் பாவத்தின் காரகத்துவம்.






பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...