சோதிட பாடம் எளிய முறையில், Online jothidam learning in Tamil,அடிப்படை முதல் சோதிடம் முழுமையாக கற்க.
Monday, 5 August 2019
Tuesday, 30 July 2019
பாடம் 23: 7. கேந்திராதிபத்திய தோஷம்:
உதாரணமாக மேஷ லக்னம் என்று எடுத்துக்கொள்வோம். 1ம் வீட்டு அதிபதி அதாவது லக்ன அதிபதி செவ்வாய், 4 ம் வீடான கடகத்திலோ, 7 ம் வீடான துலாத்திலோ, 10 ம் வீடான மகரத்திலோ அமர்ந்தால் தான் அது கேந்திராதிபத்திய தோஷம் எனப்படும். அதேபோல் 4ம் வீடான கடகத்தின் அதிபதி சந்திரன், 1வது வீடான மேஷத்திலோ, 4 ம் வீடான கடகத்திலோ,7ம் வீடான துலாத்திலோ, 10ம் வீடான மகரத்திலோ அமர்ந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம்.
Sunday, 28 July 2019
பாடம் 22: 6.நீசபங்கம், ராஜயோகம்:
கிரகங்களின் உச்சம்,நீசம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுருக்கிறேன். படத்தை பார்த்தால் நினைவுக்கு வரும். உச்சம் பெரும் கிரகம் தான் இருக்கும் வீட்டிற்கு 7வது வீட்டில் அதாவது நேர் எதிரில் நீச்சமாகும் என்பது சோதிட விதி. அவ்வாறு நீசமாகும் கிரகம் தனது வலிமையை இழந்துவிடும். நீசம் பெற்ற கிரகம் நீசபங்கம் அதாவது வலிமை பெறுவதற்கான அமைப்புகள் மற்றும் நீசம் நீங்கி ராஜயோகம் தரும் அமைப்புகள் சிலவற்றை சோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அவற்றைபற்றி கீழே பார்ப்போம்.
Thursday, 18 July 2019
பாடம் 20: 4. நவாம்சம்:
நவாம்சம் என்பது ராசிக்கட்டத்தைப் போன்றதே. எனவே ராசி கட்டமும் அந்த 12 கட்டங்களில் அடைக்கப்பட்ட நட்சத்திரங்களையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள்.
ராசி கட்டத்தில் கேது முதல் புதன் வரையிலான நட்சத்திரங்கள் வரிசையாக ஒரு கட்டத்தில் நட்சத்திரங்களின் 9 பாகங்கள் வருமாறு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சில நட்சத்திரங்கள் முழுமையாகவும், சில பாகங்களாகப் பிரிக்கப்பட்டும் 9 பாகங்கள் என்ற கணக்கில் தரப்பட்டிருக்கும்.
ஆனால் நவாம்சத்தில் எல்லா நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியிலும் 9 பாகங்களாகவே நிரப்பட்டிருக்கும். அத்துடன் கேது முதல் புதன் வரையிலான நட்சத்திரங்கள் ராசி மாதிரி வரிசையில்லாமல், கேதுவிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்,சுக்கிரனிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும்,சூரியனிலிருந்து 4,7 ல் உள்ள கிரகங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றின் நட்சத்திரங்களால் நிரப்பப்படும். விரிவான விளக்கத்தை கீழே தரப்பட்டுள்ள கட்டங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவது படத்தில் தரப்பட்டுள்ள 9 நட்சத்திரங்களின் 1 வது பாகங்கள் அனைத்தும் மேஷத்திலும், 2 வது பாகங்கள் அனைத்தும் ரிஷபத்திலும், 3 வது பாகங்கள் அனைத்தும் மிதுனத்திலும், 4 வது பாகங்கள் அனைத்தும் கடகத்திலும் நிரப்பப்படும். இதுபோல்தான் 3 வது, 4 வது படங்களிலும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு 12 ராசி கட்டங்களிலும் நட்சத்திரங்கள் நிரப்பப்படும். இதைத்தான் 1 வது படத்தில் சுருக்கமாக விளக்கி உள்ளேன்.
அடுத்தாக நவாம்சம் பயன் குறித்துப் பாரப்போம்.
ஒரு ஜாதகம் கணிப்பதற்கு ராசியும், நவாம்சமும் அவசியம். ஏனென்றால் ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை நவாம்சம் தெளிவாக்க் காட்டிவிடும்.
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று ராசி கட்டத்தில் மேஷத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்தம் 3வது பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதே செவ்வாய் நவாம்சத்தில் நட்சத்திர பாகத்தின் அடிப்படையில் மிதுன ராசியை அடையும். அங்கு செவ்வாய் பகை பெற்று வலுக்குறையும். எனவே பலன் சொல்லும் பொழுது செவ்வாய் வலு அற்றதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை துல்லியமாக அறிய நவாம்சம் பயன்படும்.
அடுத்தாக நவாம்சம் பயன் குறித்துப் பாரப்போம்.
ஒரு ஜாதகம் கணிப்பதற்கு ராசியும், நவாம்சமும் அவசியம். ஏனென்றால் ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை நவாம்சம் தெளிவாக்க் காட்டிவிடும்.
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று ராசி கட்டத்தில் மேஷத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்தம் 3வது பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதே செவ்வாய் நவாம்சத்தில் நட்சத்திர பாகத்தின் அடிப்படையில் மிதுன ராசியை அடையும். அங்கு செவ்வாய் பகை பெற்று வலுக்குறையும். எனவே பலன் சொல்லும் பொழுது செவ்வாய் வலு அற்றதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ராசியிலுள்ள கிரகங்களின் நிலையை துல்லியமாக அறிய நவாம்சம் பயன்படும்.
மேலும் ராசியிலும் , நவாம்சத்திலும் ஒரே ராசியில் ஒரு கிரகம் இருந்தால் அதற்கு வர்கோத்தம் என்று பெயர். வர்கோத்தம் பெற்ற கிரகங்கள் ஆட்சி வலுவைப் பெரும் என்பது சோதிட விதி்.
உதாரணமாக செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்று மேஷத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்தம் 1 வது பாகத்தில் இருப்பதாக எடுத்துக் கொண்டால் அது நவாம்சத்தில் மேஷத்திலேயே ஆட்சி வலுவுடன் இருக்கும்.
நவாம்சம் என்பது சுருக்கமாக அம்சம் என்று அழைக்கப்படும்.
நவாம்சம் என்பது சுருக்கமாக அம்சம் என்று அழைக்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)
பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந எனது 36 பாடங்களையும் நன்றாகப் படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...
-
பாடம் 12: பாதகாதிபதி, மாரகாதிபதி: ஒருவர் ஜாதகத்தில் மாரகம்(மரணம்) செய்வதற்கும், பாதகமான நிலைகளை செய்வதற்கும் ஆன சில அமை...
-
பாடம் 20: 4. நவாம்சம்: நவாம்சம் என்பது ராசிக்கட்டத்தைப் போன்றதே. எனவே ராசி கட்டமும் அந்த 12 கட்டங்களில் அடை...
-
பாடம் 31: கோச்சார பலன்: ஜாதக பலன் கணிக்க லக்கினம் அவசியம். கோச்சார பலன் கணிக்க ராசி வேண்டும். அதாவது பலன...






























