Monday, 2 September 2019

பாடம் 32:

பாவக காரகத்துவங்களின் பொது விதிகள்:

     ஒவ்வொரு பாவக காரகத்துவத்திற்கும் சில பொது விதிகள் உள்ளன. அவற்றையும் தெரிந்து கொண்டால் உதாரண ஜாதகங்களை விளக்கும்போது பலன்களை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். வரிசையாக ஒவ்வொரு பாவமாக பார்ப்போம்.


1வது பாவம்(லக்னம்): 

        லக்னம் பாவத்தின் முக்கியமான காரகத்துவம் ஆயுள்.

ஆயுளைக் கணிக்க சில பொது விதிகள்.

1) 3ம் பாவம், 8ம் பாவ அதிபதிகள் கேந்திரம்(1,4,7,10ம் பாவங்கள்), திரிகோணங்களில் (1,5,9ம் பாவங்கள்) அமர்வது.

2) லக்கினத்தை குரு பார்ப்பது.

3) லக்கினத்தில் லக்கின சுபர்கள் அமர்வது, பார்பது.

4) ஆயுள் காரகனாகிய சூரியன் வலுவுடன் இருப்பது.

5) லக்கினாதிபதி வலுப்பெற்றிருப்பது.

               மேற்குறித்த அமைப்புகளுக்கு மாறாக லக்கினத்தில் பாபர்கள் அமர்வது, லக்னத்தின் முன்னும் பின்னும் பாபர்கள் இருப்பது ஆயுள் வலுவை குறைக்கும்.

              பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி சுபத்தன்மையுடன் வலுப்பெற்றால் அந்த ஜாதகர் எப்படியும் நல்வாழ்வு பெற்றுவிடுவார்.

2ம் பாவம்:

  1.        2ம் பாவத்திற்கு காரகர்களான குரு (தனம்,குடும்பம்)
, புதன்(கல்வி,வாக்கு) ஆகியோர் சுப வலுவுடன் இருக்கவேண்டும்.

  2.         2ல் பாவ கிரகம் உச்சம் பெறக்கூடாது. ஏனெனில் 7ம் பாவ களத்திர ஸ்தானத்திற்கு ஆயுள் ஸ்தானமான 8ம் இடம்.


3ம் பாவம்:

1.          3ம் பாவத்தில் சகோதரகாரகனான செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் இளைய சகோதர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.

2.           செவ்வாய் லக்கினாதிபதியை விட வலிமை பெற்றிருந்தால், ஜாதகரை விட சகோதர்கள் நன்றாக இருப்பர். மாறாக இருந்தால் சகோதர்களை விட ஜாதகர் நன்றாக இருப்பார்.


4ம் பாவம்:

1. பெற்ற தாய் - காரகர் சந்திரன்

2. வீடு, ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்,ஆடம்பரப் பொருட்கள் - காரகர் சுக்கிரன்

3. நிலம், பூமியை தோண்டும் எந்திரங்கள் - காரகர் செவ்வாய்

4. சரக்கு ஏற்றும் வாகனங்கள், கழிவு அள்ளும் வாகனங்கள் - காரகர் சனி

5. வித்தை(கூரிய அறிவுத்திறன்) - காரகர் புதன்


5ம் பாவம்:

1. புத்திர பாக்கியம் - காரகர் குரு.

2. தர்ம ஸ்தான (9ம் பாவம்) அதிபதியும், கர்மாதிபதியும்(10ம் பாவம்) 5ம் பாவம்,5ம் பாவ அதிபதி அல்லது லக்னம்,லக்னாதிபதியுடன் இணைந்தால்  கர்மம் செய்ய புத்திரன் உண்டு.

3. காதல் : 5ம் பாவம் அல்லது 5ம் பாவ அதிபதி சுக்கிரனுடனோ, 7ம் பாவம், 7ம் பாவ அதிபதி, லக்கினம், லக்கினாதிபதியுடன் தொடர்பு காதலைக் குறிக்கும்.

6ம் பாவம்:

1. லக்கின பாபர்கள் இந்த பாவத்தில் நின்று கெட்டு விட்டால் அவர்கள் திசை நன்மையளிக்கும்.

2. 6ம் இடம் 3,6,10,11 என்ற உபஜெய அமைப்பிலும்,  3,6,9,12 என்ற ஆபோக்கிலீய அமைப்பிலும் வருவதால் பொது பாவர்கள் இங்கு நிற்பது நல்லது.

3. சொந்த தொழில் பற்றி அறிய :  6ம் பாவம் 10ம்பாவத்தை விட வலுக்குறைந்து , சனி, சூரியனை விட வலுக்குறைவது.

3. காரகர் : சனி


7ம் பாவம்:

1. காரகர் : சுக்கிரன்

2. இதில் சனி அமர்ந்தால் தாமத திருமணமும், களத்திர தோஷமும் அதிகமாக இருக்கும். ஆனால் 7ம் பாவம் சனியின் வீடாக இருந்தால் பெருமளவு பாதிப்பு இருக்காது.

3. 7ம் பாவத்திற்கு 8ம் பாவமான 2ம் வீட்டில் பாவ கிரகம் உச்சமாக இருந்தால் கணவன் அல்லது மனைவிக்கு ஆயுள் பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருவரின் ஆயுள் பற்றி ஆராய வேண்டும்.


8ம் பாவம்:

1. இந்த பாவ அதிபதி வலு இழந்தால் ஆயுள் பலம் குறையும், வலுப்பெற்றால் இருக்கும் பாவத்தை வலு இழக்கச் செய்வார். எனவே சம பலத்தில் இருக்க வேண்டும்.

2. இதன் அதிபதி கேந்திர,திரிகோணங்களில் இருப்பது ஆயுள் வலுவைக் கூட்டும்.

3. 8ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் அடிக்கடி கண்டங்கள்,காயங்கள்,ரத்தம் சிந்தும் வெட்டுக்காயம், நெருப்பினால் சுட்டுக் கொள்ளுதல் ஏற்படும்.

4. சனி இருந்தால் நித்திய கண்டம்,பூர்ண ஆயுள்.

5. காரகர் - சனி.


9ம் பாவம்:(தர்ம ஸ்தானம்)

1. தந்தைக்கு காரகர் : சூரியன்


10ம் பாவம்:(கர்ம ஸ்தானம்)

1. காரகர்கள் - சூரியன், சனி.

           ஜாதகத்தில் வலிமையான கிரகங்களின்  அடிப்படையில் தொழில் அமையும். இதேபோல் தொழில் ஸ்தான அதிபதியுடன் இணைந்த கிரகங்களில்
 வலுப்பெற்ற கிரகத்தின் அடிப்படையிலும் தொழில் அமையலாம். மேலும் 10க்கு உரிய கிரகம் ராசியில் எவர் வீட்டில் அமர்ந்துள்ளாரோ அவருடைய தொழில்கூடஅமையும்.
           இவ்வாறு கிரகங்களின் வலிமையை அறிந்து தொழிலை பற்றிக் கூறவேண்டும்.
            சனி வலுப்பெற்றால் அடிமைத் தொழில்.
            சூரியனும்,சிம்மமும், 10ம் பாவமும் வலுப்பெற்றால் அரசு பணிக்கு வாய்புண்டு.



 11ம் பாவம்:

தலைச்சன் குழந்தை:

                   செவ்வாய் மேஷத்துடன், 11ம் பாவ அதிபதியுடன் தொடர்பு பெற்றாலும்,
                 லக்னாதிபதி  11ம் பாவத்தில், 11ம் பாப அதிபதி லக்னத்தில் இருந்தாலும் ஜாதகர் தான் மூத்தவர்.
                    மேற்குறித்த அமைப்பில் 11ம் பாவ அதிபதி வலுவுடன் இருந்தால் மூத்த சகோதரி இருக்கலாம். 

இளைய மனைவி:

                     11ம் பாவ அதிபதி வலுத்து, 7ம் பாவ அதிபதி வலுக்குறைந்து, 2ம் பாவத்தில் பாப கிரகங்கள் அமர்ந்து அதன் அதிபரும் கெட்டு விட்டாலும், 
                     லக்னாதிபதி 11ம் இடத்தில் இருந்து உடன் செவ்வாய், சுக்கிரன் இருந்தாலும், 
                      2ம் பாவத்தில் பாபக்கிரகம் உச்சம் பெற்றாலும்
         
                       இளையதாரம் ஏற்பட வாய்புண்டு.

திடீர் யோகம்:

                      11ம் பாவத்தில் ராகு இருந்து அந்த பாவம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரமாக இருந்து, ராகு கேந்திரத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்துவிட்டால் ராகு திசையில் திடீர் சோகம் ஏற்படும். 

காரகர் - குரு. 



12ம் பாவம்:

1. 11 ம் பாவத்தில் ராகு வுக்கு சொல்லப்பட்ட திடீர் அதிர்ஷ்டம் இங்கும் பொருந்தும். 

2. இங்கு கேது அமர்வது என்பது மோட்ச பிறவி எனப்படும் என்றாலும் குரு நிலை குறித்தும் அறிய வேண்டும்.

3. ராகு சுபர் பார்வை இன்றி இருந்தால் நல்ல தூக்கம் இருக்காது.

4. காரகர் - சனி. 

                  

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...