Wednesday 10 July 2019

பாடம் 12: பாதகாதிபதி, மாரகாதிபதி:

                 ஒருவர் ஜாதகத்தில் மாரகம்(மரணம்) செய்வதற்கும், பாதகமான நிலைகளை செய்வதற்கும் ஆன சில அமைப்புக்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய விரங்களைக் காண்போம்.
                  சர,ஸ்திர,உபய ராசிகள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.  அவற்றின் அடிப்படையில் இந்த மாரக,பாதக அமைப்புகள்  தரப்பட்டுள்ளன.

                  சரம் ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகியவற்றை லக்கினங்களாக கொண்டு பிறந்த சாதகர்களுக்கு 2ம் வீடும், 7ம்வீடும் மாரகஸ்தானங்கள்.அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள். 11ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி்.

                  உதாரணமாக, மேஷம் லக்கினமாக கொண்ட சாதகருக்கு 2ம் வீடான ரிஷபமும், 7ம் வீடான துலாமும் மாரகஸ்தானங்கள். அவற்றின் அதிபதிகளான சுக்கிரனே மாரகாதிபதி.(இங்கு சுக்கிரனே ரிஷபத்திற்கும், துலாத்திற்கும் அதிபதி). 11ம் வீடான கும்பம் பாதகஸ்தானம். அதன் அதிபதி சனியே பாதகாதிபதி. இப்படியே மற்ற சர ராசிகளான லக்கினங்களுக்கும் கணித்துக்கொள்ளலாம்.

                  ஸ்திர ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம், ஆகியவற்றை லக்கினங்களாக கொண்டு பிறந்த சாதகர்களுக்கு 3ம் வீடும்,8ம் வீடும் மாரகஸ்தானங்கள். அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள். 9ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி.
                   உதாரணமாக ரிஷபத்தை லக்கினமாக கொண்டு பிறந்த சாதகருக்கு 3ம் வீடான கடகமும்,8ம் வீடான தனுசும் மாரகஸ்தானங்கள். அவற்றின் அதிபதிகளான சந்திரனும், குருவும் மாரகாதிபதிகள். 9ம் வீடான மகரம் பாதகஸ்தானம். அதன் அதிபதி சனி பாதகாதிபதி. இப்படியே மற்ற ஸ்திர ராசிகளுக்கும்.

                  உபய ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகியவற்றை லக்கினங்களாக கொண்டு பிறந்த சாதகர்களுக்கு 7ம் வீடும்,11ம் வீடும் மாரகஸ்தானங்கள். அவற்றின் அதிபதிகள் மாரகாதிபதிகள். 7ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி. உபய லக்கினத்திற்கு மட்டும் தான் 7ம் வீடு மாரக, பாதக ஸ்தானமாக வரும்.
                   உதாரணமாக மிதுன லக்கனத்தில் பிறந்த சாதகருக்கு 7ம் வீடான தனுசும், 11ம் வீடான மேஷமும் மாரகஸ்தானங்கள. அவற்றின் அதிபதிகளான குருவும், செவ்வாயும் மாரகாதிபதிகள். 7ம் வீடான தனுசு பாதகஸ்தானம். அதன் அதிபதியான குரு பாதகாதிபதி. இப்படியே மற்ற உபய ராசிகளுக்கும்.

                   

1 comment:

  1. பாதகராசிகளின்அடிப்படை யாது?11-09-07 ஆகியன
    பாதகமாககொள்ளப்பட்டதன்அடிப்படை யாது

    ReplyDelete

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...